Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ்ப் பிரதேசங்களை இணையவிடாது தடுப்பதே சாத்தியம் : டக்ளஸ்

தமிழர் பிரதேசங்களான வடக்கையும் கிழக்கையும் பிரிக்கக் கூடாது என்று 13 வது திருத்தச் சட்டத்தில் கூறப்பட்டிருந்த போதும் அதனைப் பேரினவாத அரசுகள் நடைமுறைப் படுத்தவில்லை. தமிழ்ப் பேசும் மக்களின் பலத்தைச் சிதைப்பதற்கான சதியாகவே இந்தநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இப்போது அரச துணைப்படையான ஈ.பி.டி.பியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவும் இதே கருத்தை வலியுறுத்துவது தெரிந்தததே.

“வடக்கு, கிழக்கு இணைப்பு உடனடியாகச் சாத்தியமில்லை என்பதையும் இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது.” இவ்வாறு டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த டக்ளஸ் அங்கிருந்து நேற்று மாலை நாடு திரும்பிய பின்னர், யாழ்ப்பாணத்திலுள்ள ஈ.பி.டி. பி.யின் தலைமை அலுவலகத்தில் தொலைபேசியூடாக செய்தியாளர்களுடன் உரையாடிய போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தனது இந்திய விஜயம் வரலாற்று முக்கியத்துவம்  வாய்ந்த வெற்றிகரமான ஒன்று என மேலும் அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version