Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ்பெண் ஊழியர்கள் பொட்டு வைக்ககூடாது : ரூபவாஹினி உத்தரவு

சிறிலங்கா அரச தொலைக்கட்சியான ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் ஐ அலை வரிசையில் ஒளிபரப்பாகும் தமிழ்ச் செய்திகளை வாசிக்கும் தமிழ்ப் பெண்கள் நெற்றியில் பொட்டு வைக்கக் கூடாதென நிர்வாகம் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளதாக ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த உத்தரவை மீறிச் செயற்பட முயற்சிக்கும் பெண்களைச் செய்தி வாசிப்பிலிருந்து உடனடியாக நிறுத்துமாறும் கண்டிப்பான உத்தரவை நிர்வாகம் பிறப்பித்துள்ளது
சில நாட்களுக்கு முன்னர் ஒரு தமிழ்ப் பெண் நெற்றியில் பொட்டு வைத்து குங்குமமும்; பூசிக் காணப்பட்டதனையடுத்து  ரூபவாஹினி உயர் மட்டம், பொட்டும் வைக்கக் கூடாது குங்குமமும் பூசக் கூடாது என்ற நிலையில் இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுத்துள்ளது.
தமிழ் மக்களின் மத, காலாசாரம் பண்பாடுகளுக்குத் தடைவிதிக்கும் வகையில் நிர்வாகம் இவ்வாறு நடந்து கொண்டுள்ளமை தொடர்பில் அங்கு கடமையாற்றும் தமிழ் ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியும் வேதனையும் ஏற்பட்டுள்ளதாக தமிழ் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயத்தில் இங்கு கடமையாற்றும் தமிழ் உயரதிகாரிகள் கூட எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காத நிலையில் நிர்வாகத்தின் உத்தரவினை அப்படியே கடைப்பிடிக்குமாறு தமிழ்ச் செய்தி வாசிக்கும் பெண் அறிவிப்பாளர்களுக்குத் தெரிவித்துள்ளமை குறித்தும் தமிழ் ஊழியர்கள் மத்தியில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.

Raj Suthan

Exit mobile version