நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீச்சான்குப்பத்தை சேர்ந்த 42 மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க 6 படகில் சென்றனர். அவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் அவர்களை சுற்றி வளைத்து கடத்திச்சென்றனர். கடத்திச்செல்லப்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் திரிகோணமலையில் வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனால், நாகை மாவட்டத்தில் பதற்றம் நிலவுகிறது.