திண்டுக்கல் அருகே ரெட்டியாபட்டியில் உள்ள வரண்ட கிணற்றில் இருந்து உடல் கருகிய நிலையில் குறித்த மூன்று சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தமிழகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையை சேர்ந்த கலைச்செல்வி (வயது-35), அவரது மகன்மாரான வினோத் (வயது-12), கௌதம் (வயது-7) ஆகியோரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தீயில் கருகிய நிலையில் சடலங்கள் காணப்படுவதால் குறிப்பிட்ட மூவரும் கொலை செய்யப்பட்ட பின்னர் கிணற்றில் வீசப்பட்டாளர்களா அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா என்ற சந்தேகத்தில் தமிழகப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.