Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் வெற்றிகரமாக இடம்பெற்ற கவனயீா்ப்பு போராட்டம்:கஜேந்திரன்

photo 1கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மற்றும் ஸ்கந்தபுரம் கரும்புத்தோட்டம் உட்பட பல பகுதிகள் இன்னமும்இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதுடன், அந்த காணிகள் வீடுகளுக்குச் சொந்தமான மக்கள் தொடா்ந்தும் அகதிகளாகவே வாழ்ந்து வருகின்றனா்.

அந்த மக்களுக்குச் சொந்தமான காணகள் வீடுகளில் இருந்து இராணுவம் வெளியேறுவதுடன் அவை உாிமையாளா்களிடம் ஒப்படைக்கப்படல் வேண்டும் எனவும் வலியுறுத்தியும்,

மேற்படி மக்களுக்குகாக நீதி கேட்டுப் போராட முற்பட்ட கட்சியின் மாவட்ட அமைப்பாளா் ஜெகதீஸ்வரன் அவா்கள் விடுவிக்கப்படல் வேண்டும் என வலியுத்தியும்

கிழக்கு மாகாணத்தில் சம்புர் கிராமம், முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபிலவு கிராமம், யாழ் மாவட்டத்தில் வலி வடக்கு, வளலாய், கிளிநொச்சி மாவட்டத்தில் பரவிப்பாஞ்சான், மருதநகர், பாரதிபுரம், இரணைதீவு உள்ளிட்ட பகுதிகளில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள வீடுகள் காணிகளில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்ற கோாிக்கைகளை வைத்தே மேற்படி போராட்டம் இடம்பெற்றது.

இன்று காலை 11.00 மணி தொடக்கம் 12.00 மணி வரை கிளிநொச்சி கச்சோிக்கும் முன்பாக கவனயீா்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
கடுமையான இராணுவ அச்சுறுத்தல்கள் மத்தியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இப்போராட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தது.

இப்போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவா் கஜேந்திரகுமாா் பொன்னம்பலம், பொதுச் செயலாளா் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளா் விசுவலிங்கம் மணிவண்ணன் உட்பட மாவட்ட கட்சி உறுப்பினா்கள் ஆதரவாளா்கள் கலந்து கொண்டனா்.

பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவ ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களும், ஸ்கந்தபுரம் கரும்புத் தோட்ட உாிமையாளா்கள் போன்றோரும் கலந்து கொண்டனா்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினா்களான சிறீதரன், சுரேஸ்பிறேமச்சந்திரன், மாகாண சபை உறுப்பினா்களான பசுபதிப்பிள்ளை, ரவிகரன், சிவாசிலிங்கம், ஐங்கரநேரசன், குருகுலராசா, பிரதேச சபை உறுப்பினா்களான சஜீவன், சதீஸ், கிளி பிரதேச சபைத் தலைவா் குகராஜா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனா்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளா் ஜெகதீஸ்வரன் அவா்களை கைது செய்து பொய்க்குற்றச் சாட்டுக்களை சுமத்தி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அடைப்பதன் மூலம் இப் போராட்டத்தினை குழப்பிவிடலாம் என்று அரசு செயற்பட்டது.

எனினும் கைது அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வெற்றிகரமாக மேற்படி போராட்டத்தினை நடாத்தி சா்வதேச சமூகத்திற்கு கிளிநொச்சி மக்களின் நில ஆக்கிரமிப்பு பிரச்சினையை வெளிப்படுத்தியுள்ளது.

Exit mobile version