Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ்த் தேசியத்தின் பேரால் வாக்குப் பொறுக்கிய எம்.பி ராஜபக்சவே தமிழர்களுக்குத் தேவை என்கிறார்

Vino-mpகாணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு நேற்று 30.08.2014 அன்று வவுனியா நகரசபை மண்டபத்தில் பொதுக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. 200 இற்கும் மேற்பட்ட சிங்கள மக்களும் முஸ்லிம் மக்களும் பெருமளவில் கலந்து கொண்டனர். நிகழ்வில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் சர்வாதிகார ஜனாதிபதி ஆட்சி முறையே சிறந்தது என்ற ‘பொன்மொழியை’ உதிர்த்தார்.

“இலங்கையில் நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்க வேண்டும் என்று ஒரு சாராரும், ஆட்சி மாற்றம் தேவை என்று மற்றுமொரு சாராரும் குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்றார்கள். உண்மையில் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஸ அரசாங்கமும், அவரிடமுள்ள நிறைவேற்று அதிகார முறைமையும் இருக்கும் வரையில் தான், எமக்கான தீர்வை நாம் பெற்றுக்கொள்ள முடியும். நிறைவேற்று அதிகார அல்லது “சர்வாதிகாரத்தனமான ஒரு ஜனாதிபதி” ஆட்சி முறை இருக்கின்ற போதே, எமக்கான நிரந்தர அரசியல் தீர்வை மட்டுமல்ல, காணிகள் அபகரிக்கப்படுகின்ற விடையங்கள், தடுப்புக்காவலிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட தமிழ் மக்களின் இன்றுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கும் விடிவைக்காண முடியும்.” என்று தமிழ்த் தேசியத்தின் வாக்குப் பொறுக்கிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கூறியமை கேலிக்கிடமக அரங்கத்தில் கேட்டது.

சம்பந்தனும் சுமந்திரனும் இனக்கொலையாளி மோடியுடன் தேசிய இன விடுதலைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்க இனக்கொலையாளி ராஜபக்சவிடம் வினோ எம்.பி வினா வடிவில் வளைந்து மண்டியிட்டார்.

Exit mobile version