Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியத் தூதர் சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தாவின் அழைப்பையேற்று அவருடனான சந்திப்பில் இன்று திங்கட்கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.
இன்று நண்பகல் இந்திய உயர் ஸ்தானிகர் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது. இலங்கை இனப் பிரச்சனையில் தொடர்ச்சியாகத் தலையிடும் இந்திய அரசு தனது பிரந்திய துருவ வல்லரசு நலன்களுகளின் அடிப்படையில் இனப்பிரச்சனையை மேலும் சிக்கலானதாக மாற்றியுள்ளது. வன்னிப் படுகொலைகளின் பின்னணியிலிருந்த இந்திய அரசும் தமிழ் நாடு மானில அரசும் இலங்கை அரசின் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவு வழங்குகின்றன. இனப்பிரச்சனை தீர்வு குறித்து இந்திய வெளியுறவுச் செயலர் கடந்தவாரம் கருத்து வெளியிட்ட நிலையில் இச் சந்திபு முக்கியத்துவம் பெறுகிறது. மன்மோகன் சிங் – மகிந்த ராஜபக்ச திம்ப்புச் சந்திப்பிலும் இது குறித்துப் பேசப்பட்டது.

Exit mobile version