Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ்க் கதைஞர் வட்டம் ( தகவம் ) நடாத்திய சிறுகதை பரிசளிப்பு விழா – 2008

 

 தகவம் அமைப்பின் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த சிறுகதைகளுக்கான பரிசளிப்பு விழா, 18.10.2009 அன்று கொழும்புத் தமிழ்ச் சங்க, சங்கரப்பிள்ளை மண்டபத்தில், தலைவர் மாத்தளை கார்த்திகேசு தலைமையில் இலக்கிய ஆர்வலர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.

தகவம் 1975ஆம் ஆண்டு அமரர் வ. இராசையாவினால் தமிழ்ச் சிறுகதைகள் பற்றிய கலந்துரையாடல்களை மேற்கொள்ளுதல், தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்களை ஊக்குவிப்பது, தமிழ்ச் சிறுகதைகளை நுலாக வெளியிடுவது எனும் மூன்று நோக்கங்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை தனது பணியினைச் செவ்வனே நிறைவேற்றி வருகின்றது. தற்போது தகவத்தின் தலைவராக விளங்கும் மாத்தளை கார்த்திகேசு, இலக்கிய ஆர்வலர்களின் பங்கேற்புடன பணிகைள சிறப்புடன் மேற்கொண்டு வருகின்றார்.

தகவம், ஈழத்தில் பத்திரிகை மற்றும் சஞ்சிகைகளில் வெளிவந்த சிறுகதைளில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து அதற்கான பரிசில்களைக் காலண்டுக்கொருதடவை வழங்கிவருகின்றது. தற்போது காலண்டுக்கான சிறந்த சிறுகதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருடாந்தப் பரிசளிப்பு நடைபெற்று வருகிறது.

தகவத்தின் 2008 ஆம் ஆண்டுக்கான பரிசளிப்பில், முதன்மை விருந்தினராக பேராசிரியர் அ.சண்முகதாஸ் கலந்து கொண்டு, தகவம் பற்றிய சிறப்புரைய வழங்கியிருந்தார். இவ்விழாவில் மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் அவர்களும் அவரது துணைவியாரும் கௌரவிக்கப்பட்டனர். தெளிவத்தை ஜோசப்பிற்குரிய பாராட்டுரையை எழுத்தாளர் வைத்திய கலாநிதி எம்.கே.முருகானந்தம் வழங்கியிருந்தார்.

பரிசுக்கதைகள் தொடர்பான விமர்சனத்தை ஜனாப் எம்.ஏ.எம். ரமீஸ் முன்வைத்ததிருந்தார். திருமதி இராசையா பரிசில்களையும் கேடயங்களையும் வழங்கியிருந்தார்.

 (விஜய்)

Exit mobile version