Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ்க் கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டும் : சித்தார்த்தன்

மே 19ற்குப் பின்னர் 30வருடகால யுத்தம் நிறைவடைந்துள்ள சூழ்நிலையில் தமிழ் கட்சிகள் அனைத்தும் அரசியல் தீர்வு தொடர்பாக ஒரே கருத்தினை எட்டுவதற்கும், தமிழ் மக்களின் அவலங்களை போக்குவதற்கும் கருத்தொருமைப்பாட்டுக்கு வரவேண்டியது காலத்தின் கட்டாயமாகவுள்ளது என புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன்  தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற வீரமக்கள் தின நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் தமிழ்க் கட்சிகள் ஒரே அமைப்பாக சேர்ந்து இயங்க முடியாவிட்டாலும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளிலாவது அனைத்து கட்சிகளும் கருத்தொருமைப்பாட்டுடன் ஒற்றுமையாக செயற்படவேண்டியது தற்போதைய நிலையில் அவசியமும் அவசரமுமாகிறது என வலியுறுத்தி உள்ளார்.
தமிழ் மக்கள் நாளாந்தம் அழிக்கப்படுகிறார்கள், இராணுவமயமாக்கப்பட்ட இலங்கையில் முதலாளித்துவத்தின் குறைந்தபட்ச ஜனநாயகம் கூட நிர்மூலமாக்கப்பட்டுவிட்டது. ஐம்பதாயிரம் மக்களைச் மூன்று நாட்களுக்குள் சாகடித்துவிட்டு எஞ்சியவர்களை பிச்சைக் காரார்களாகவும், அடிமைகளாகவும் நடத்திவரும் இலங்கை அரசிற்கு எதிராக மூச்சுகூட விட்டிராத சித்தார்த்தன் எந்த அரசியல் தளத்தில் ஒற்றுமை குறித்துப் பேசுகிறார்?
15 ஆயிரம் கைதிகள் சிறைவைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படும் தேசத்தின் நுளைவாசலில் நின்று கொண்டு சித்தார்த்தன் பேசுகின்ற ஒற்றுமை தமிழ் மக்க்களைச் சுரண்டுவதற்கான ஒற்றுமை.
மக்கள் ஒற்றுமைக்குத் தயாராவார்கள் அதன் முதல் வெளிப்பாடு சித்தார்த்தன் போன்றவர்களை அரசியலிலிருந்து அன்னியப்படுத்துவதற்கான போராட்டமாகத் தான் அமையுமுடியும்.

-சி.எஸ்.குமரன் – வவுனியா

Exit mobile version