80களின் ஆரம்பங்களில் வளர்ச்சி நிலையிலிருந்த ஈழப் போராட்டத்தை இந்திய உளவுத்துறை சிதைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தேசிய விடுதலை இயக்கங்களை ஆயுதக் குழுக்களாக மாற்றியமைத்து அனைத்தையும் நிர்மூலமாக்கியது.
அவலங்கள் நிறைந்த இன்றைய இலங்கைச் சூழலில் இந்திய அரச உளவுத்துறையின் பின்ன்ணியில் இயங்கும் ஈ.என்.டி.எல்.எப் என்ற அமைப்பை தமிழ் நாட்டிலே இலங்கைத் தமிழ்ப் பேசும் மக்களின் தேசிய இனப் பிரச்சனையில் தலையிடுமாறு முடுக்கிவிட்டுள்ளது.
இதே வேளை புலிகள் ஆயுதப் பயிற்சி பெற்றுக்கொள்வதாகவும், தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் திட்டமிட்ட செய்திகளைக் கசியவிட்டுள்ளது.
இந்திய உளவுத்துறை இவ்வாறான தாக்குதல் முயற்சிகளைத் தாமே மேற்கொண்டு தமிழ் நாட்டு மக்கள் மற்றும் ஈழ மக்களிடையேயான பிளவையும் வெறுப்புணர்வையும் ஏற்படுத்த திட்டமிட்டுளதா என தமிழ் நாட்ட்டு ஆய்வாளர் ஒருவர் சந்தேகமெழுப்பியுள்ளார்.
எது எவ்வாறாயினும் தமிழ் நாட்டிலும் இந்தியா முழுவதும் உருவாகிவரும் முன்னேறிய பிரிவொன்று எதிர்காலத்தில் போராட்டத்தை வழி நடத்தும் தகமையும், விழிப்புணர்வும் கொண்டதாகவிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.