Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பில் அறிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பில் அறிக்கை ஒன்று இனியொரு உட்பட்ட ஊடகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுளது. இவ்வறிக்கையின் உண்மை நிலை குறித்து உறுதிப்படுத்த முடியவில்லை. அறிக்கையின் விபரம் வருமாறு:
05.07.2010
தலமைச்செயலகம்,
தமிழீழ விடுதலைப்புலிகள்,
தமிழீழம்.
எமது அன்புக்குரிய தமிழ் மக்களே!
கரும்புலிகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 5ம் நாள் கடைப்பிடிக்கப்படும் நினைவு நாளே கரும்புலிகள் நாள்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் தற்கொடைப் போராளியான மில்லர் 1987 யூலை 5ம் நாள் சிறீலங்கா இராணுவத்திற்கு எதிராக, நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த இராணுவமுகாமின் மீது தற்கொடைத் தாக்குதலை நடத்திய நாளாகும்.
இத்தாக்குதலின் பின்னர் எத்தனையோ தற்கொடைத் தாக்குதல்களை தமிழீழத்தின் புதல்வர்கள் தமிழீழ மக்களின் தாயக விடுதலைக்காக நிகழ்த்தியுள்ளார்கள். காலகாலமாக ஏதிரியின் குகைக்குள்ளேயே உலவி, கொள்கையிலிருந்தும் கட்டுப்பாடுகளிலிருந்தும் வழுவாமல் தமது கடமையை செய்த அற்புத மனிதர்கள். எத்தனையோ கரும்புலிகள் புகழ்மயக்கம் இல்லாமலே தம்மை வரலாற்றில் விட்டுச் சென்றுள்ளார்கள்.
“பலவீனமான என் இனத்தின் பலம் மிக்க ஆயுதமாகவே நான் கரும்புலிகளைத் தேர்ந்தெடுத்தேன்” என தமிழீழ தேசியத்தலைவர் மேதகு.வே. பிரபாகரன் அவர்களால் விழிக்கப்படுகின்றமையின் அர்த்தத்தின் ஆழம் பற்றி நாம் உணர்வோம்.
எனவேதான் இன்றும் தமிழர் தரப்பின் சக்தி மிக்க ஆயுதமாகப் பார்க்கப்படுவது இந்த உயிராயுதம்.
இன்று தமிழீழதேசமெங்கும் தனது கால்களை அகலப்பதித்திருக்கும் சிறீலங்காவின் கொடிய கரங்களினால் எமது மக்கள் படும் துன்பங்களை எல்லாம் எமது கொள்கையில் மேலும் உரம் கொள்ள வைக்கும் செயற்பாடாகும். ஒரே நாளில் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை கொன்று குவித்த சிங்கள தேசத்துக்கு விரைவில் தமிழீழ மக்கள் பதில் கொடுப்பார்கள்.
தமிழீழ தேசியத்தலைவர் மேதகு.வே. பிரபாகரன் அவர்களின் வழிகாட்டலில் எவ்வித விட்டுக்கொடுப்புக்களுக்கும் இடமின்றி எமது விடுதலைப்பயணம் தொடரும்.
இந்நிலையில், தம் சுயத்தை அழித்துச் சென்ற அந்த அற்புதமான கரும்புலி மாவீரர்களுக்கு எம் வீரவணக்கங்கள்.
தலமைச்செயலகம்,
தமிழீழ விடுதலைப்புலிகள்,
தமிழீழம்.

Exit mobile version