தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற யுத்தத்தின் போது உயிர் நீத்த தமது உறுப்பினர்களை நினைவு கூறும் வகையில் மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்படுகிறது.
2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளினால் தமது அமைப்பைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக கட்சியின் பேச்சாளர் அசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.
இந்தத் தினத்தை மாவீரர் நாளாக அனுஸ்டிப்பதற்கு தமது கட்சி தீர்மானித்துள்ளதாகவும், எதிர்வரும் ஆண்டுகளிலும் இதே தினத்தில் மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதே வேளை கிழக்கு லண்டனின் புதிய திசைகள் ஏற்பாடுசெய்த ஒன்று கூடலில் (11.04.2011)தமிழ்த் தலைமைகளின் குழுவாத நிலைப்பாட்டைக் கண்டித்த சிறீ என்பவர் நாடுகடந்தத தமிழீழம் பிரித்தானியத் தமிழர் பேரவை ஆகியவற்றை நோக்கி கேள்விகளைக் எழுப்பினார். இதன் போது இவ்விரு அமைப்புக்களும் அனைத்து இயக்கப் போராளிகளையும் அங்கீகரிப்பதோடு, அனைத்து இயக்க்கத் தலைவர்களையும் விடுதலைப் போராட்டத் தலைவர்களாக அங்கீகரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதனைக் கொள்கை ரீதியாக ஏற்றுக்கொண்ட இவ்விரு அமைப்புக்களைச் சார்ந்தவர்களும் தமது அமைப்புக்களோடு இக்கருத்தினை அமைப்பு ரீதியான முடிவாக முன்வைப்பதாகக் கூறினர்.