இவர்கள் இருவரும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்து சுமார் 1 ஆண்டு நிறைவடைந்து விட்டது. இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற வழக்கில் ஆஜராகியிருந்த இவ்விருவர் மேலும் தொடுக்கப்பட்டுள்ள வழக்கை தள்ளுபடிசெய்யுமாறு அவர்களது சட்டத்தரணி அப்பாதுரை விநாயகர்மூர்த்தி தெரிவித்தார்.
இதே வேளை தமிழினி என்றழைக்கப்படும் விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் மகளர் அணித் தலைவி சுப்ரமணியம் சிவகாமியை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் ரஷ்மி சிங்கப்புலி உத்தரவிட்டுள்ளார்.
சரணாந்த புலிகள் அமைப்பைச் சேர்ந்த போராளிகளில் பெரும்பாலானோர் குறித்த தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகளில் முதன்மையானவர்கள் என்று கருதப்பட்டோர் உட்பட பலர் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில் உலகின் எந்த மனித உரிமை அமைப்புக்களும் இவர்கள் குறித்த தகவல்களைப் பெறுவதற்கு எட்ந்தக் காத்திரமான முயற்சியையும் மேற்கொள்லவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.