Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழால் ஒன்று பட வேண்டுமாம்- கருணாநிதி சொல்கிறார்.

தமிழ் தமிழ் என்று சொன்னால் பார்ப்பானும் நாங்களும் தமிழ்தான் பேசுகிறோம் நாங்களும் தமிழர்கள்தான் என்று நம்மிடம் வந்து ஒட்டிக் கொள்வார்கள். ஆகவே நாம் திராவிடர்கள் என்று சொல்ல வேண்டும் என்றார் பெரியார். பார்ப்பனரல்லாத முற்போக்கு சாதியினரின் அதிகாரம் வேண்டி துவங்கப்பட்ட திராவிட இயக்கத்தின் அடிப்படைத் தத்துவங்களின் ஒன்று இது. இன்று இக்கொள்கை காலாவதியாகிப் போனாலும் தமிழகத்தில் திராவிட இயக்கத்திற்கு பெரும் சவாலாக நீண்டகாலமாக உயிர்ப்போடிருப்பது தமிழ் தேசிய இயக்கங்கள். தமிழுணர்வால் உந்தப்பட்டு பிற்போக்கு தேசியவாதத்தை கடைபிடிக்கும் இக்குழுக்கள் நீண்டகாலமாக கருணாநிதியின் ஆதரவுச் சக்திகளாக இருந்தார்கள். ஈழப் போரின் கருணாநிதியின் துரோகத்தின் பின்னர் இக்குழுக்களில் பெரும்பாலானவை கருணாநிதிக்கு எதிராக செயல்படுகிற நிலையில் ஆட்சி, அதிகாரம், சுரண்டல், இந்தியத் தேசியல் எல்லாவற்றிர்கும் திராவிடம் திராவிடம் என்று பேசும் கருணாநிக்கு திடீர் தமிழ் பற்று உருவாகியிருக்கிறது. சரி தமிழனைத்தான் காப்பாற்ற வில்லை த்மிழுக்காவது ஏதாவது செய்வாரா? என்றால் அதிலும் பச்சைத் துரோகங்கள்தான். சமச்சீர் கல்வி, தமிழ் ஆட்சிமொழி, உயர்நீதிமன்றத்தில் தமிழ், என்று போராடிய சக்திகளை நசுக்கிய கருணாநிதி. அர்ச்சகர் பள்ளிகளை இழுத்து மூடியது மட்டுமே அனைத்து சாதியினருக்கும் செய்த சாதனை எனலாம் இந்நிலையில் பார்ப்பன பெண் நாட்டிய சிகாமணியான பத்மா சுப்ரமணியத்தின் அரங்கேற்றத்தில் பூவிதழும் போர்வாளும் நாட்டிய நிகழ்வில் இந்துத்துவ வெறியரான வேளங்குடி கிருஷ்ணன் முன்னிலையில் சரணடைந்தார் கருணாநிதி. அப்போது பேசும் போது, பார்ப்பனர்களின் தமிழ் பற்றி பேசிய கருணா ” இதற்கு

முன்பு இந்த உரைகளைக் கேட்கவில்லையே! என்ற ஆதங்கம்தான், அவர்களுடைய உரைகளைக் கேட்டபிறகு எனக்கு ஏற்பட்டது என்று சொன்னால், அது மிகையாகாது. அவர்களுடைய சொற்பொழிவில்சொல்லப்பட்ட கருத்துக்களில் ஒன்றிரண்டு சொற்களில் எனக்கும், அவர்கள் கையாண்ட சொற்களுக்குமிடையே வேறுபாடு இருக்கலாம். ஆனால், எதைச் சுற்றினாலும், கடைசியாக தமிழ் தான் என்று அவர்கள் முடித்த அந்த உணர்வு இருக்கிறதே, அந்த உணர்விலே நாங்கள் உடன்பாடு கொண்டவர்கள்.ஆனால், அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கும். தமிழ் எங்களுக்கு கற்றுக் கொடுத்த பண்பாடும், நாகரிகமுமே அதற்கு காரணம். அவர்கள் பேசிய கருத்துகள் சிலவற்றில் எங்களுக்கு வேறுபாடுகள் இருந்தாலும் தமிழால் நாங்கள் ஒன்றிணைந்தோம். அங்கே சுற்றினாலும் அவர்கள் தமிழில் வந்துதான் முடித்தார்கள். அந்தத் தமிழ்தான் நம்மை ஒருங்கிணைக்கிறது. அதனால் அரசியல், மதம் என்று எவ்வித வேறுபாடுகளும் இன்றி அனைத்து தரப்பினரும் கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் பங்கேற்றனர். . தமிழர்களாக இருப்பவர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். தங்களைப் பற்றி சந்தேகம் கொண்டவர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள்.
அந்த மாநாட்டிலே தமிழைக் கேட்கும்போது, எந்த உணர்வு ஏற்பட்டதோ, எந்தளவிற்கு இந்தத் தமிழ் மொழி நம்மையெல்லாம் ஒன்றுபடுத்தியிருக்கிறது என்ற உணர்வு ஏற்பட்டதோ, அந்த உணர்வு அந்த மாநாடோடு நின்று விடாமல், தொடர்ந்து இந்த நாட்டிய நிகழ்ச்சியிலும், அது கொழுந்து விட்டெரிந்து, தமிழகத்திலே எல்லோரையும் இணைக்கக்கூடிய ஒரு ஆற்றலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே, இந்த நிகழ்ச்சியில் இந்த நாட்டிய நாடகம் இணைக்கப்பட்டிருக்கின்றது. அதனால் தான், “போர்வாளும் பூவிதழும்என்ற தலைப்பிலே இந்த நாட்டிய நாடகம் நடைபெறுகின்றது.உத்தபுரத்தில் தலித் மக்களுக்கு எதிராக சுவர் கட்டிய கொடிக்கால் பிள்ளைமாரும் தமிழ் பேசுகிறார்கள். பாதிக்கப்பட்ட தலித் மக்களும் தமிழ்தான் பேசுகிறார்கள். தமிழ் பேசுகிற இரு சமூகங்களுக்கிடையில் கருணாநிதி கட்சியின் உள்ளூர் பிரமுகர்களின் ஆதரவோடு சுவர் இருக்கும் போது எப்படி தமிழால் இணைய முடியும் என்ற கேள்வியை நாம் கேட்க வேண்டும்.

Exit mobile version