இவ்விடயம் தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட விசேட அறிக்கையில் தெரி
விக்கப்பட்டிருப்பவை வருமாறு:
பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதுடன் ஆயுதப் போராட்டமும் முடிவுக்கு வந்தது. எமது நாட்டில் பயங் கரவாதம் மீண்டும் தலைதூக்காமல் இருப் பதை உறுதிசெய்வதாயின் தமிழ் பேசும் மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்குப் பின்வரும் காரணிகளை அடிப்படையாகக் கொண்ட நிரந்தரத் தீர்வுத்திட்டம் பெற்றுக்கொடுக் கப்பட வேண்டும்.
அ) சகல இனத்தவர்களுக்கும் பாதுகாப்புடன் வாழக்கூடிய சூழல் உருவாக்கப் பட்டு, மனிதப் பெறுமானங்களை மதிக் கின்ற இலங்கையர் என்ற தனித்துவத்தை ஊக்குவித்தல்.
ஆ) சகல இனத்தவர்களினதும் கலாசார புனிதத் தன்மையைப் பேணிப்பாது காத்தலும் மதத்தைப் பின்பற்றுதல், மொழியைப் பேணிப் பாதுகாத்து, வளர்ச்சியடையச் செய்து, தம் தனித்துவத்தை மேம்படுத்துதல் மற்றும் வெளிப்படுத்துவதற்கும் அவர்களுக்கு வாய்ப்பளித்தல்.
இ) சகல பிரஜைகளுக்கும் எதுவித பேதமுமின்றி, சட்டத்தின் முன் சமத்துவம் மற்றும் நியதி பேணப்பட்டு முழுமையாக மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளை அனுபவிக்கும் சுதந்திரம்.
ஈ) தமது விருப்பத்தின் பிரகாரம் தான் விரும்பிய அரச கரும மொழியில் கருமமாற்றுவதற்கான உரிமை.
உ)சகலரும் சமமாக மதிக்கப்படுவதை ஊக்குவித்தல்
* பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கும் அதேவேளை, சகல பிரஜைகளுக்கும் தத்தமது மதங்களை சுதந்திரமாகவும், தடையின்றியும் பின்பற்றும் உரிமையை ஊக்குவித்தல்.
* ஓர் இனத்தை அல்லது மதத்தைவிடவும் கூடுதலான சலுகையை மற்றொரு மதத்திற்கோ அல்லது சமூகத்திற்கோ காட்டாதிருத்தல்.
* ஓர் இனத்தை அல்லது மதத்தை விடவும் கூடுதலான பொறுப்புகளை மற்றுமொரு இனத்திற்கோ அல்லது மதத்திற்கோ வழங்காதிருத்தல்.
ஊ) புதிய நாடாளுமன்றத்தின் மூலம் இலங்கை வாழ் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய அரசியல் யாப்புச் சட்டம் ஒன்றை சட்டமாக்கும்வரை நடைமுறையிலுள்ள அரசியல் யாப்புச் சட்டத்தை அமுல்படுத்தல்.
எ) மாகாண மற்றும் அங்கு வாழும் இனங்களை நிலையான பன்முக ஜனநாயகத்தின் சரத்திற்குப் பங்காளிகளாக்குவதனை ஊக்குவிப்பதனூடாக சகல பிரஜைகளுக்கும் மத்திய,மாகாணசபை மற்றும் உள்ளூராட்சிமன்ற மட்டத்தில் தேசத்திற்கு உயிரூட்டும் செயற்பாட்டால் முழுமையாக இணைந்து செயற்படுவதனை உறுதிப்படுத்தல்.
ஏ) பிரிக்கப்படாத இலங்கைக்குள் சிங்கள,தமிழ்,முஸ்லிம், பறங்கியர்கள் ஆகிய சகல இனத்தவர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும் முறை ஒன்றை ஏற்படுத்தல். போதியளவு நிதி மற்றும் நீதி அதிகாரம் உட்பட மாகாணத்தில் சுபீட்சம் மற்றும் நல்லாட்சிகளைக் கொண்டுநடத்துவதற்கும் சமூகப் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்குத் தேவையான பரவலான அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குதல்.
என்று கூறப்பட்டுள்ளது.
Comments