கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாழ்.பலக்லைக்கழக தமிழ் முஸ்லிம் மாணவர்களின் தொழுகைக்கூடத்தில் கழிவு எண்ணை வீசப்பட்டது. பல்கலைக்கழகத்தைச் சூழவுள்ள தமிழ் இராணுவத் துணைக்குழுக்களே தமிழ் மற்றும் முஸ்லிம் தமிழர்களிடையே மோதலை ஏற்படுத்தும் நோக்கில் இச்செயலைத் திட்டமிட்டு நடத்தியதாகத் தெரியவந்தது. இதே போன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளையில் இரண்டாம் வட்டாரத்தில் அமைந்துள்ள தமிழ் மக்களின் குடிசைகள் படைத்தரப்பினை சேர்ந்தவர்களென சந்தேகிக்கப்படுவோரால் எரிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் தமிழ் முஸ்லிம்களிடையே மோதலை ஏற்படுத்தும் நோக்கில் இராணுவத்தினரே இச்செயலை மேற்கொண்டதற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. தமிழ் முஸ்லீம்களிடையே மீண்டும் மோதல் சூழலை ஏற்படுத்த இத்தீக்கிரையாக்கல் நடந்திருப்பதாக முஸ்லிம் அமைச்சர் ஒருவரும் கருத்து வெளியிட்டுள்ளார்.