தமிழர்கள் பொருளாதார நன்மைகளை கருத்திற் கொண்டே புகலிடக் கோரிக்கைகளை விடுப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையிலிருந்து வெளிநாடுகளில் தஞ்சம் கோரும் எந்தவொரு தமிழருக்கும் அச்சுறுத்தல்கள் கிடையாது எனவும், பொருளாதார நோக்கங்களை முதன்மைப் படுத்தி இவ்வாறு வெளிநாடுகளில் தமிழர்கள் புகலிடம் கோருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதே வேளை 19ம் திகதி The International Institute For Strategic Studies (IISS) இல் உரையாற்றுவதற்காக லண்டன் வரவுள்ள ஜி.எல்.பீரிஸ் இற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பிரித்தானிய தமிழ் அமைப்புக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளன. 19ம் திகதி மதியம் 12 ணியிலிருந்து 3 மணிவரை நடைபெறும் இவ்வார்ப்பாட்டம் தலைமையகத்தின் முன்னால் நடைபெறுகிறது.
The International Institute For Strategic Studies
Arundel House
13–15 Arundel Street, Temple Place
London WC2R 3DX
Tel: +44 (0) 20 7379 7676
Fax: +44 (0) 20 7836 3108