Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழர்களுக்கு இந்தியா வீசியெறிந்த எலும்புத்துண்டையும் மீளக் கேட்கும் இனக்கொலையாளிகள்

இலங்கையில் பதின்மூன்றாவது திருத்தச்சட்டம் இந்திய பிராந்திய இராணுவப் பாதுகாப்பு நலன்களுக்கு அமையவே கைச்சாத்திடப்பட்டது. அந்தச் சட்டத்தில் இலங்கை பேரினவாத அரச நலன்களுக்கு அமைவான தமிழர் உரிமைகள் ஆங்காங்கே வழங்கப்பட்டுள்ளன. இனப்படுகொலை ஆட்சி அதனைக் கூட வழங்க மறுக்கிறது.
கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் பஸில் ராஜபக்ஷ உள்ளிட்ட பல முக்கிய உறுப்பினர்கள் 13ஆம் திருத்தச் சட்டத்தை நீக்கவேண்டும் என்று வலியுறுத்தும் போது, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் எவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைவது என்று இரா.சம்பந்தன் கேள்வியெழுப்பியுள்ளார்.
13 ஆம் திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டே தீர்வு வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரி வருகிறது. இந்தியாவும் இத னையே வலியுறுத்துகிறது.
இந்த நிலையில் அரசின் பல்வேறு உறுப்பினர்கள் இதனை நீக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். தமிழ் மக்களுக்கான தீர்வுக்கு ஜாதிக ஹெல உறுமய, விமல் வீரவன்ஸ போன்றோர் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அத்துடன், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் 19 அரச உறுப்பினர்கள் உள்ளனர். எதிர்க்கட்சிகளின் சார்பில் 12 உறுப்பினர்கள் இணைத்துக் கொள்ளப்படுவர். இதிலும் அரசே பெரும்பான்மை வகிக்கிறது.
இவ்வாறான ஒரு குழுவில் அரசின் கருத்துக்களுக்கே முக்கியத்துவம் வழங்கப்படும். இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் இணைவதில் சாத்தியம் இல்லை என்று சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
இங்கே சம்பந்தனுக்கு தேவைப்படுவது இந்திய நலன்களே தவிர தமிழ்ப் பேசும் மகளின் நலன்கள் அல்ல.

Exit mobile version