Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வுதான் ஒரே தீர்வு: பிரணாப் முகர்ஜி

”இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வுதான் ஒரே தீர்வு” என்று மத்திய அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

கனடா நாட்டு அயலுறவுத்துறை அமை‌ச்ச‌ர் லாரன்ஸ் கேனன், மத்திய அயலுறவுத்துறை அமை‌ச்ச‌ர் பிரணாப் முகர்ஜியுடன் தொலைபேசியில் பேசி, இலங்கை நிலவரம் பற்றி கேட்டறிந்தார்.

அப்போது பேசிய பிரணாப் முகர்ஜி, இலங்கையின் வடக்குப் பகுதியில் உள்ள அப்பாவி பொது மக்கள் போரால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களது பாதுகாப்பு, ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு தங்களது உயிர்களைப் பாதுகாத்துக்கொள்ள இடம் பெயர்ந்து செல்லும் நிலைமை கவலை அளிக்கிறது. அங்குள்ள மக்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளிப்பதே பிரச்சனைக்கு ஒரே தீர்வு என்று அவரிடம் கூறினா‌ர்.

Exit mobile version