Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழக மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல்.

கடந்த முப்பதாண்டுகளாக இராமேஸ்வரம் மீனவர்கள் தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் இன்று வரைத் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இதுவரை சுமார் 400 மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தமிழக மீனவர்கள் குற்றம் சுமத்துகிறார்கள். இந்நிலையில் இராமேஸ்வரம் மீனவர்களுக்குத் தெரியாமல் தமிழகத்தைச் சார்ந்த மீனவர் தலைவர் என்று சொல்லப்படும் அன்பழகன் என்பவர் இலங்கைக்குச் சென்று இலங்கை அரசோடு ரகசிய ஒப்பந்தம் ஒன்றை செய்து வந்ததோடு, இலங்கை மீனவர்களை தமிழகத்திற்கு அழைத்து வந்து பேச்சுவார்த்தை நடத்துவது போன்று நாடகமாடி தாங்கள் கொல்லப்படுவதற்கு காரணம் நீங்களே என்று பழியை தமிழக மீனவர்கள் மீதே போட்டுச் சென்றுள்ளது. இலங்கை அரசு. அதன் உளவாளி கே,பி ஆகியோரின் ஆசி பெற்ற குழுவான இலங்கை குழுவினருக்கும் தமிழகத்தில் விலைக்கு வாங்கப்பட்ட சில மீனவ பிரதிநிகளோடு சென்னையிலும் இராமேஸ்வரத்திலும் நடந்த பேச்சுவார்த்தையை ஒட்டி நாம் இனியொருவில் கட்டுரை ஒன்றை விரிவாக வெளியிட்டிருந்த நிலைய்ல் நேற்று தமிழக மீனவர்கள் இலங்கக் கடற்படையினரால் தாக்குதலுக்குள்ளாகியிருக்கின்றனர். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 120 மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எட்டு பேர் கொண்ட மீனவர் குழுவை இலங்கை கடற்படையினர் வந்து மறித்தனர். பின்னர் அவர்களை துப்பாக்கியின் பின்புறமாக தாக்கி விரட்டியடித்தனர்.மேலும் மீனவர்கள் வைத்திருந்த இறால் மீன்களை எடுத்துக் கொண்ட கடற்படையினர், மீனவர்களின் வலைகளையும் அறுத்து விட்டுச் சென்றனர்.

Exit mobile version