Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழக மீனவர்கள் ஈரான் சிறையில் :நான்கு மாதங்களின் பின்னர் தெரியவந்த இந்திய அவமானம்

fishermenகன்னியாகுமரி: கன்னியாகுமரி ஆரோக்கியபுரத்தை சேர்ந்த 3 மீனவர்கள் ஈரானில் சிறைபிடிக்கப் பட்டுள்ள தகவல் நான்கு மாதங்களின் பின்னரே தெரியவந்துள்ளது.கன்னியாகுமரி அருகே உள்ள ஆரோக்கியபுரம் மீனவர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சகாய மைக்கேல் ஆண்டனி (வயது25), ஆண்டனி சுரேஷ்(26), ஆரோக்கியகெவின்ராஜ்(23). இவர்கள் 3 பேரும் சவுதி அரேபியாவில் தங்கியிருந்து மீன் பிடி தொழில் செய்து வருகிறார்கள்.
இவர்கள் 3 பேரும் ஒரு விசைப்படகு மூலம் கடந்த டிசம்பர் மாதம் ஆழ்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஈரான் கடற்படையினர் மீனவர்களை சிறை பிடித்தனர். பிறகு அவர்களை படகுடன் பந்தராபஸ் என்ற இடத்திற்கு அழைத்து சென்று அங்குள்ள சிறையில் அடைத்தனர்.
கன்னியாகுமரி மீனவர்கள் 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்ட தகவல் 4 மாதம் கழித்து தற்போது தான் அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தெரிய வந்தது.
இறைமையுள்ள அரசு தனது எல்லைக்குள் வாழும் மக்களின் குறைந்தபட்ச பாதுகாப்பை உறுதிசெய்யும். வல்லரசாகிறோம் என மார்தட்டிக்கொண்டு பல்தேசியக் கம்பனிகளுக்கு நாட்டை அடமானம் வைக்கும் இந்திய அரசின் குடிமக்கள் சிறைப்பிடிக்கப்பட்டு நான்கு மாதங்களின் பின்னரே அவர்களின் குடும்பத்தினர் அறியும் அவல நிலையில் இந்தியா உள்ளது. இவர்களை விடுவிப்பதற்கு இந்திய அரசோ தமிழ் நாட்டு மாநில அரசோ எந்த நடவடிக்கையும் இதுவரை மேற்கொண்டதாகத் தெரியவில்லை. இந்த நிலையில் அவர்களின் குடும்பத்தினர் விடுதலைக்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

[Facebook_Comments_Widget title=”” appId=”” href=”http://www.facebook.com/inioruandu” numPosts=”10″ width=”470″ color=”light” code=”html5″ ]

Exit mobile version