Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழக மீனவர்களை ஏமாற்றும் சக்திகள் விரைவில் அம்பலப்படுத்தப்படுவார்கள்-நாம் தமிழர்.

இலங்கையில் இருந்து இலங்கை மீனவர் சங்கத் தலைவர் என்று சொல்லிக் கொண்டு சூர்யகுமாரன் என்பவர் 21 பேர் கொண்ட குழுவினருடன் வந்து இராமேஸ்வரம் மீனவர்களுடன் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.இதற்கு மத்திய,மாநில அரசுகள் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன.தமிழக மீனவர்கள் சிங்களக்கடற்படையினால் கொல்லப்படுவதைத் தடுக்கத் தவறிய அரசுகள்,தமிழர்கள் எல்லை தாண்டுவதே இதற்கு காரணம் என்று பிரச்சனையைத் திசை திருப்புகின்றன.இது குறித்துப் பேச்சு வார்த்தை என்று மக்களை ஏமாற்றுகின்றன.ஆனால் உண்மையில் நம் நாட்டு எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களையே பெரும்பாலும் சிங்களக் கடற்படை சுட்டுக் கொன்றிருக்கின்றது.இதற்கு முக்கிய காரணம் த்மிழர்கள் எங்கிருந்தாலும் தனக்கு எதிரியாக சிங்களன் கருதுவது தான்.ஆகவே இந்த பேச்சுவார்த்தை தமிழர்களை ஏமாற்றும் ஒன்றாகும்.மேலும் ஊடகங்களில் எல்லாம் சூர்யகுமாரன் என்பவர் எமது சகோதர சொந்தங்களான தமிழக மீனவர்கள் இரட்டை மடியைப் பயன்படுத்துவதாகவும். விசைப்படகுகளைப் பயன்படுத்தி மீன் பிடித்து இலங்கை மீனவர்களின் தொழிலுக்கு பங்கம் ஏற்படுத்துவதாகவும் கூறி வருகிறார். ஆனால் நமது மீனவச் சொந்தங்களின் சார்பில் இந்தப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டவர்கள் யார்? அதில் எத்தனை பேர் உண்மையான பாரம்பரிய மீனவர்களின் தலைவர்கள் என்பதெல்லாம் குறித்து தகவலே இல்லை. மேலும் இப்பேச்சுவார்த்தைக்கு சூர்யகுமாரன் குழுவினர் வருவதற்கு முன்னர் வடமாராச்சி மீனவர் சங்கம் என்கிற பெயரில் இந்திய டோலர் படகுகள் அத்து மீறி மீன்பிடிப்பதால் எங்கள் கடல் வளம் பாதிக்கப்படுகிறது என்று இலங்கை அரசிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.இந்தப்புகாரை அளித்தவர் இப்பொழுது பேச்சு வார்த்தைக்கு வந்துள்ள சூர்யகுமாரன் என்று சந்தேகம் உள்ளது.இதனை அவர் தெளிவு படுத்த வேண்டும்.இக்குழு தமிழகம் வந்துள்ள நிலையில் இலங்கை அரசிடம் என்ன புகார் அளித்தார்களோ அதே புகார்களை இங்கே குற்றச்சாட்டுகளாக வைக்கிறார்கள். ஆக வருவதற்கு முன்பே , ஏற்கனவே முடிவு செய்து விட்டு குற்றச்சாட்டுகளை எமது மீனவ மக்கள் சுமத்துவதற்காகவே இக்குழு வந்துள்ளாதோ என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது. எஸ்.எம்.கிருஷ்ணா எல்லை தாண்டும் மீனவர்களைக் காப்பாற்ற முடியாது என்று சொன்னதையே இக்குழுவினர் வேறு வார்த்தைகளில் சொல்கிறார்கள்.மேலும் கச்சத்தீவு குறித்து உண்மைக்குப்புறம்பாக அது இலங்கைக்கு சொந்தமான ஒன்று என்பதைப்போல அறிக்கை அளித்திருக்கின்றார்கள். இது இலங்கை,இந்திய அரசுகளின் மிகத் தந்திரமான சதி என்று தெரிகிறது. அரசுக் குழுவாக வந்துள்ள இக்குழுவினரை இங்கு கலந்துரையாட ஏற்பாடு செய்ததன் பின்னணியில் உள்ள சக்திகள் யார் என்பதை விரைவில் நாம் தமிழர் அமைப்பு அம்பலப்படுத்தும் என்கிற நிலையில் தமிழக ரத்த மீனவ சொந்தங்கள் இச்சூழ்சிக்கு பலியாகாமல் தங்களின் தொழில் உரிமையை நிலைநாட்ட எவ்வித விட்டுக் கொடுப்புகளுக்கும் ஆளாகாமல் போராட வேண்டும்.விரைவில் எம் தமி மீனவச்சொந்தங்களைத் திரட்டி இந்த மோசடி நாடகத்திற்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

Exit mobile version