Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழக மீனவர்களுக்கு கடற்படை பாதுகாப்பு: நீதிமன்ற உத்தரவு

இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு அவ்வப்போது ஆளாகி வரும் தமிழக மீனவர்களுக்கு இந்திய கடற்படை பாதுகாப்பு அளிக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்து. இலங்கை இனப்படுகொலையை பயங்கரவாதத்திற்கு எதிரான போர் எனக் கூறும் இந்திய அரசு இவ்வுத்தரவு குறித்து மௌனம் காக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் இந்திய அயலுறவுச் செயலர் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து இலங்கை அரசு விவாதிப்பதாக கூறிவிட்டு,கொழும்பு சென்று சிங்கள அரசுடன் பேச்சு நடத்திக்கொண்டிருக்கும்போதே தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டனர்.

இந்நிலையில் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோரி வழக்கறிஞர் ஸ்டாலின் பொதுநலன் மனு ஒன்றை மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மதுரை உயர் நீதிமன்ற கிளை நீதிபதி பாட்ஷா தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி, மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களுக்கு இந்திய அரசாங்கத்தின் கடற்படை பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று மாநில அரசுக்கு மற்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டார்.

Exit mobile version