ஸ்ரீலங்கா இனவாத அரசு ஈழத்தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட கட்டுமீறிய இனப்படுகொலை மற்றும் தமிழர் வாழ்விடங்களில் மேற்கொண்டுவரும் திட்டமிட்ட குடியேற்றங்கள், உட்பட சிங்கள இனவாத அரசினால் வன்னியில் மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தில் மேற்கொண்ட இன அழிப்புக்கு எதிராக தமிழகத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒரணியாக தமது ஒன்றுபட்ட ஆதரவினை வெளிப்படுத்தியிருப்பது ஈழத்தமிழ் மக்களிற்கு ஆறுதலை தந்துள்ளது.
சிங்கள அரசுகளால் பல்லாண்டு காலமாக புறக்கணிக்கப்பட்டு அரசியல் ரீதியான அடக்குமுறைக்கு எதிராக தந்தை செல்வா முதல் அண்ணர் அமிர்வரை பல்வேறு தலைவர்களின் கீழ் அகிம்சை வழியில் போராடி எந்தவொரு உரிமையையும் இனவாத அரசுகள் வழங்குவதற்கு முன்வராத நிலையில் ஆயுதப்போராட்டம் கூர்மையடைந்தது. அகிம்சை வழியில் மேற்கொண்ட போராட்டங்களிற்கும் ஆயுதபோராட்டத்திற்கும் தமது தார்மீக ஆதரவினை வழங்கிய இந்திய மற்றும் தமிழக மக்களின் ஆதரவினை என்றுமே நாம் மறந்துவிடவில்லை.
பயங்கரவாத அழிப்பு என்ற போர்வையில் ஈழத்தமிழினத்தையே அழித்து ஒட்டுமொத்த இன அழிப்பினை கட்டவிள்த்துவிட்டுள்ள சிங்கள இனவாத அரசு இன்றுவரை எந்தவொரு அரசியல் தீர்வினையும் ஈழத்தமிழ் மக்களிற்கு வழங்க தயாரில்லை. ஆயுதப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டு தமிழ்மக்களிற்கு ஒர் நியாயமான தீர்வை வழங்குவேன் என்று ஆட்சிபீடம் எறிய இன்றைய மஹிந்த அரசு, பேச்சுவார்த்தை என்றும் பாராளுமன்ற தெரிவுக்குழு என்றும் கடந்த காலங்களைப்போன்று சர்வதேசத்தையும், தமிழ்மக்களையும் ஏமாற்றும் வழக்கமான அரசியல் நகர்வையே முன்நிலைப்படுத்தி வருகின்றது.
இந்திய மற்றும் தமிழக மக்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் என்றுமே எமது விடுதலையை பெற்றிடுவதற்கு உதவவேண்டும் என்பதுவே எமது நிலைப்பாடு. தொப்புள்கொடி உறவு என்று தெரிவித்துவரும் தமிழ் மக்களிற்கு தமிழக மக்களின் இந்த ஒன்றுபட்ட ஆதரவு பெரிய ஆறுதலை தந்துள்ளது. இறுதி யுத்தம் என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான மக்களை பலியெடுத்தும், அங்கவீனர்களாக்கியும், முகாம்களிற்குள் முடக்கிவைத்து அராஜக ஆட்சி நடாத்திவரும் இலங்கை அரசு. நியாயப+ர்வமான ரீதியில் தீர்வை வழங்க தவறிவருவதுடன். தமிழ்மக்களின் ஆயுதபோராட்டத்தை நசுக்கிவிட்டேன் என்ற விறாப்புடன் தொடர்ந்தும் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கியும், தமிழர் வாழ்விடங்களை அபகரித்தும், சொத்துக்களை சூறையாடியும் பல்வேறு சூழ்ச்சிமங்களை அரங்கேற்றி தமிழ்மக்களை விரக்தியின் விழிம்பிற்கு தள்ளியள்ளது.
ஆகவே எமது மக்களின் மறுக்கப்பட்ட உரிமைக்காக உழைத்துவரும் அமைப்புக்களிற்குள் ஒற்றுமையென்பது அல்லது ஒன்றுபட்ட கருத்தினை முன்வைக்க முடியாத துரதிஸ்டம் தொடர்கின்றது. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க,
தி.மு.க, தமிழக காங்கிரஸ், பாரதிய ஜனதாக்கட்சி, சி.பி.ஜ, சி.பி.எம் உட்பட அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரே குரலாக ஜெனிவாவில் இலங்கை அரசிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்தை இந்திய மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்று ஒன்றுபட்டு குரல் எழுப்பியுள்ளது ஈழத்தமிழ் மக்களிற்கு நம்பிக்கையையை தோற்றுவித்துள்ளது.
இந்திய அரசினதும், தமிழக மக்களினதும் ப+ரண ஆதரவு தொடர்ந்து நீடிக்கவேண்டும். மறுக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்களிற்கு உரிமை கிடைத்திட தமிழகத்தில் வாழும் தமிழக உறவுகள் தொடர்ந்து கைகொடுத்திட வேண்டும். நீண்டகாலத்திற்கு பின்னர்
தமிழகத்தில் உள்ள கட்சிகள் தமக்குள் உள்ள வேறுபாடுகளை மறந்து ஈழத்தமிழ் மக்களிற்காக ஒன்றுபட்டு வெளியிட்டுள்ள தற்போதைய கருத்து மிகப்பெரும் நம்பிக்கை கீற்றினை தோற்றுவித்துள்ளது. தமிழக மக்களினது ஆதரவு தொடர்ந்து நீடிக்க வேண்டும் உங்களுடனான நல்லுறவு என்றென்றும் நீடிக்க வேண்டும் என்பதுவே எமது நிலைப்பாடும் ஆகும்.
தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (சர்வதேச ஒன்றியம்)
ஊடக இணைப்பாளர் எஸ்.மைய+ரன்