Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழக அரசின் ஒத்துழைப்புடன் கூடங்குளம் அணுமின் நிலையத்தை வெகுவிரைவில் திறப்போம்! : அமைச்சர் நாராயணசாமி

தமிழக அரசின் ஒத்துழைப்புடன் கூடங்குளம் அணுமின் நிலையத்தை வெகுவிரைவில் திறப்போம் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.  தமிழக அரசு இரட்டை வேடம் போடுவதாக கூறுவது தவறு. எங்களுக்கு பூரண ஒத்துழைப்பு தருகிறது. தமிழக அரசும் தனது தேவையை உணர்ந்திருக்கிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை மாநில அரசின் கையில் உள்ளது.
மாநில அரசின் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையில் நாங்கள் தலையிட மாட்டோம். போராட்டக்குழுவினருக்கு அங்குள்ள தொழில் அதிபர் நிதி உதவி செய்கிறாரா? என்பது பற்றி உள்துறை விசாரித்து வருகிறது. விசாரணையில் இருக்கும்போது நான் எதுவும் சொல்லக்கூடாது.
பல்தேசிய நிறுவனங்களின் தேவைக்காகவும் கொள்ளிக்காகவும் அணு மின்நிலையங்கள் மக்கள் குடியிருப்புச் சார்ந்த பகுதிகளில் உருவாக்கப்பட்டன. ஜப்பானில் மட்டுமன்றி உலகின் பல பகுதிகளிலும் ஏற்பட்ட அழிவுகளின் பின்பதான மக்கள் போராட்டங்களின் எதிரொலியாக அணு மின்நிலையங்கள் இழுத்து மூடப்பட்டன.
குறைந்த பட்ச ஜனநாயக் உரிமைகளும் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் இந்தியா போன்ற நாடுகளில் அன்னிய மூலதனச் சுரண்டலுக்காக உருவாகியுள்ள அரசுகளும் அரசியல் வாதிகளும் உலகம் முழுவதும் நடைபெற்ற அழிவுகளையும் மீறி அணுமின் நிலையத்திற்காகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version