Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழக அரசின் இரட்டை முகம் அம்பலம் : பழ நெடுமாறன்

இதுவரை ஜெயலலிதா அரசை ஆதரித்துவந்த பழ.நெடுமாறன் முள்ளிவாய்க்கால் முற்றம் இடிக்கப்பட்ட பின்னர் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் ஒரே கொள்கையுடன் செயற்படுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். பொது நலவாய நாடுகளின் மாநாட்டில் இந்தியா பங்களிக்கக்கூடாது என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய மறுகணமே முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிப்பதற்கான தயாரிப்பு வேலைகளில் இறங்கிய ஜெயலலிதா மறுநாள் அதிகாலை இடிக்கப்படுவதற்கான உத்தவை வழங்கியுள்ளார். தமிழ் ஊடகங்கள் ஜெயலலிதாவின் தீர்மானத்தை பிரதானப்படுத்திப் பிரசுரிக்க நெடுமாறன் பின் தள்ளப்பட்டார்.

ஜெயலலிதாவையும் பாரதீய ஜனதாவையும் நம்பி முள்ளிவாய்க்காலில் புலிகளின் தலைமையையும் மக்களையும் காத்திருக்குமாறு கோரிய அனைவரது முகத்திரையும் முற்றம் அழிக்கப்பட்டதோடு கிழிந்து தொங்கியது. முள்ளிவாய்க்கால் முற்றம் அழிக்கப்பட்டது குறித்து பலர் ஏமாற்றமடைந்தாலும் ஜெயலலிதாவினதும் ஏனைய அரசியல் வியாபாரிகளதும் முகம் வெளித்தெரிந்ததில் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் அக்கறை கொண்டவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்.

தமிழர்களின் அவலத்தை சித்தரிக்கும் வகையில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் முற்றத்தை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இடித்தமை யாரும் அனுமதிக்க முடியாது என்பதுடன், தமிழக அரசின் இரட்டை முகம் அம்பலம் என நெடுமாறன் தெரிவித்திருப்பது குறிப்பத்தக்கது.

Exit mobile version