Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழகம் மழை வெள்ளத்தில் 25 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். 5 பேர் உடல் மீட்பு.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கு மழை பெய்து வருகிறது. வேலூர் தே

சிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பெரிய கானாறு கால்வாயை ஒட்டி பன்னீர்செல்வம் நகர், எம்.வி.சாமிநகர், சாலாவுதீன் நகர் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடிசைகள் உள்ளன. பெரும்பாலும் ஏழைகளான இம்மக்கள் பட்ட நிலமில்லாத காரணத்தால் கால்வாயை அண்டிய பகுதிகளில் குடிசைகளை அமைத்து வாழ்ந்து வந்தனர். இப்பகுதியில் பாலாற்றில் இணையும் கானாறு கால்வாய் தான் இப் பகுதியின் பெரிய வடிகாலாகும்.இந் நிலையில் ஆம்பூரில் நேற்று பெய்த கனமழையால் நாயக்கனேரி மலையில் உள்ள ஆனைமடுகு அணை நிரம்பியது. அதிலிருந்து காட்டாற்று வெள்ளம் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்தனர். மேலும் அதிகரித்த வெள்ளத்தில் பல குடிசைகளை அடித்துச் செனல்பப்பட்டன.இதில் 25 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். தகவல் அறிந்த தீயணைப்புப் படையினர் விரைந்து வந்தாலும் மின்சாரம் இல்லாததால் மீட்பு பணிகளை மிகுந்த கடும் சிரமத்துக்கிடையே மேற்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். வெள்ளத்தில் தவித்த பலரை கயிறு கட்டி மீட்டனர்.ஆனாலும் மேலும் பலர் வெள்ளத்தில் மாயமாகிவிட்டனர். இன்று காலை கானாறு வடிகால் மற்றும் பாலாற்றில் தேடும் பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டனர்.அப்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உடல்கள் சிக்கியன. அவர்கள் அமானுல்லா என்பவரின் மனைவிமுன்னி (25), மகள் ஷானு (6), மகன் அக்பர் (3) என்று தெரிய வந்துள்ளது. அமானுல்லாவை காணவில்லை. அவர் பாலாற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.மேலும் பாலாற்றில் சேற்றுப் பகுதியில் சிக்கியிருந்த 2 வாலிபர்களின் உடல்களும் சிக்கின. இதில் ஒருவர் இலியதுல்லா (16) என்புறு தெரியவந்துள்ளது.மற்றொருவர் யார் என்று அடையாளம் தெரியவில்லை.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மேலும் 20க்கும் மேற்பட்டோரின் நிலை என்னவானது என்று தெரியவில்லை. தொடர்ந்து தேடும் பணி நடந்து வருகிறது.வெள்ளம் அரசு பஸ் டெப்போவுக்குள்ளும் புகுந்ததில் அங்கிருந்த 10 பஸ்களும் நீரில் முழ்கியுள்ளன.

Exit mobile version