மத்திய அரசின் உயர்கல்வி, ஆராய்ச்சி மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம், புதுச்சேரியில் வழக்கறிஞர்கள் ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இரண்டு மாநிலத்லும் 60 ஆயிரம் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் நீதிமன்ற பணிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கறிஞர்கள் நீதிமன்றம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தங்களது உரிமைகளை பறிக்கும் வகையில் மத்திய அரசின் மசோதா உள்ளதாக வழக்கறிஞர்கள் குற்றச்சாற்றினர்.
நவதாராளவாத பொருளாதார ஆக்கிரமிப்பின் பின்னர் இந்திய உயர் குடிகள் உயர் தொழில்நுட்ப மற்றும் ஏனைய பல் தேசியத் துறைகளில் ஈடுபட ஆரம்பித்தனர். இதன் விளைவாக வழக்குரைஞர்களில் பெரும்பகுதி ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவிலிருந்து உருவாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.