ஹைதராபாத் குண்டு வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து சென்னை மற்றும் தமிழகமெங்கும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் கிரிக்கெட் போட்டி நடைபெறும் சேப்பாக்கம் மைதானம், தலைமைச் செயலகம், நீதிமன்ற வளாகம், மெரினா கடற்கரை, முக்கிய கோயில்கள் ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் ரகசிய கண்காணிப்பு கமராக்கள் மூலம் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் தமிழகம் முழுவதுமுள்ள கடலோரப் பகுதிகளையும் பொலிஸார் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
குண்டுவெடிப்பின் பின்புலம் குறித்து பல சந்தேகங்கள் எழும் நிலையில் தமிழ் நாட்டிலும் ஆந்திராவிலும் அரச பாசிசத்தை வலுப்படுத்தும் கருவியாகக் குண்டுவெடிப்புப் பயன்படுத்தப்படுகின்றது.