தமிழகத்திலிருந்து சென்ற பிரபல வார இதழ் ஒன்றின் செய்தியாளர் மகா தமிழ்ப் பிரபாகரன் கைது செய்யப்படடுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கிராஞ்சி என்ற இடத்திலேயே இவ்வாறு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மக்களோடு உரையாடிக் கொண்டிருக்கையில் அங்கு சென்ற படையினர், இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டார். இறுதியாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பிரபாகரன் குடிவரவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.