தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், தலித் மக்களின் கோரிக் கைகளை வலியுறுத்தி அக்டோபர் 27 அன்று கோட்டை நோக்கி பேரணி நடைபெறுகிறது.
இது தொடர்பாக வெள் ளியன்று (அக்.23) சென்னை யில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது வருமாறு:
தமிழகத்தில் 7ஆயிரம் கிராமங்களில் தீண்டாமைக் கொடுமை இன்னமும் நீடிக் கிறது. குடியுரிமை பாதுகாப்புச் சட்டம்-1955, வன் கொடுமை தடுப்புச் சட்டம்-1989ஆகியவற்றை சரியாக அமல்படுத்தியிருந்தாலே தீண்டாமையை ஒழித்தி ருக்க முடியும்.
40வருட கால திராவிட இயக்க ஆட்சியில் தலித் மக்களின் சமூக- பொருளாதார நிலை பெருமளவு உயர வில்லை. அவர்களின் சமூக நிலையை உயர்த்த தீண் டாமை ஒழிப்பு போராட்டத்தை நடத்தினால் தமிழக அரசு சட்டவிரோதமாக நடந்து கொள்கிறது. சாதி வெறியர்களுக்கு ஆதரவாக நடந்து கொள்கிறது. இது தான் காங்கியனூரில் லதா எம்எல்ஏ தாக்கப்பட காரணமாக அமைந்தது. தலித் மக்களின் பொருளாதார நிலையை உயர்த்த வீடு, நிலம் வழங்க வேண்டும். அதனையும் தமிழக அரசு செய்ய மறுக்கிறது.
தமிழகத்தில் தலித்துகளுக்கு 18சதவீத இடஒதுக் கீடு உள்ளது. இவற்றில் பல நூற்றுக்கணக்கான பின்னடைவு பணியிடங்கள் காலியாக உள்ளதை நிரப்ப வேண்டும். அதே நேரத்தில் மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டின் அளவை 19சதவீதமாக உயர்த்த வேண்டும்.
அதேபோன்று பட் ஜெட்டில் மக்கள் தொகைக்கு ஏற்ப நிதிஒதுக்கீடு செய்ய வேண்டும். மாறாக 7முதல் 8 சதவீதம் நிதிதான் ஒதுக்கப்படுகிறது. கடந்த 10ஆண்டு களில் 12ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டு செலவிடப்படாமல் உள்ளது. இதனால் தலித் பழங்குடி யின மக்களின் வாழ்நிலை உயராமல் உள்ளது.
வெட்டியான் வேலை செய்கிறவர்களை, மயான உதவியாளர்களாக உள் ளாட்சிகளில் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு 2007 ஜூலை மாதம் அறிவித்தது. ஆனால் அது அறிவிப்பாகவே உள் ளது. திமுக-அதிமுக கட்சி கள் தலித்துகளின் வாழ்வு உயர எதுவும் செய்ய வில்லை. தமிழகத்தில் 1.25கோடி தலித், பழங்குடியின மக்கள் சாதியின் பெயராலும், தீண்டாமையாலும் இன்னலு க்கு உள்ளாகி உள்ளனர்.