மக்கள் விரோத காங்கிரஸ் அரசு இது வரை இல்லாத அளவிற்கு எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய எரிபொருட்களின் விலையை கூட்டியுள்ளது. சிலிண்டர் ஒன்றுக்கு 35 ரூபாய் வரை விலை ஏற்றம் பெற்றுள்ள நிலையில் நடுத்தவர, ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை நிலை குலையும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இடதுசாரிக் கட்சிகள் இந்த விலை உயர்வுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில் தமிழகத்தில் வருகிற 5-ஆம் தியதி விலைவாசி உயர்வுக்கு எதிராக அதிமுக கூட்டணித் தலைவர்கள் அழைப்பு விடுத்திருக்கின்றனர்.இதுதொடர்பாக
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சிபிஐ செயலாளர் தா.பாண்டியன், சிபிஎம் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு மக்கள் பெரும் பாதிப்பை அடைந்துள்ளனர். எனவே இந்த விலை உயர்வை உனடியாக மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும்.அதை வலியுறுத்தி நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்திற்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவு அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கோரியுள்ளனர்