ராமநாதபுரத்தை சேர்ந்த சேதுபதி அரசு கலைகல்லூரி மாணவர்கள் 11 பேர் தங்களது உண்ணா நிலை போராட்டத்தை துவங்கிவிட்டார்கள்
திருச்சி தூய வளனார் கல்லூரிக்குள் தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பு சார்பாக 10 மாணவர்கள் தொடர் உண்ணாவிரதம். அவர்களுக்கு ஆதரவாக 100க் கணக்கான மாணவர்கள் போராட்டம். காவலர்கள் குவிப்பு!
கும்பகோணம் அரசு கலை கல்லூரி மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது புதுச்சேரி அரசு கல்லூரி மாணவர்கள் 1000 பேர் உள்ளிருப்பு போராட்டம்.
ஈழ விடுதலைக்கான தமிழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் போராட்டம்.
வேலூரில் உண்ணாவிரதம் தொடங்கியுள்ள மாணவர்களிடம் Internal மார்க்கெல்லாம் போடனும் ஒன்றும் கிடைக்காது என்று காவல்துறையினர் மிரட்டி வருகின்றனர்…
நெல்லை பசும்பொன் முத்துராமலிங்கதேவர் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்.
பாளையங்கோட்டை செயிண்ட் சேவியர் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில்.
அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் ஆரம்பம்.
பெம்பலூர்-ஆத்தூர் களத்தில் நின்று போராடிக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு அலை பேசியில் அழைத்து முகநூல் நண்பர்கள் சார்பாக எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன்,மாணவர்களின் ஆர்ப்பரிப்பு சத்தம் விண்ணை முட்டுகிறது!
நெல்லை பசும்பொன் முத்துராமலிங்கதேவர் கல்லூரி சார்பாக இலயலோ கல்லூரி மாணவர்களை விடுவிக்கவும் அவர்களது கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடந்துக்கொண்டிருக்கிறது
மனோன்மணியம் பல்கலை, மாணவர்கள் போராட்டம்.
தஞ்சை கலைகல்லூரி மாணவர்கள் சுமார் 3000 பேர் சாலை மறியல் போராட்டம்—- கைது செய்ய போதுமான போலீசார் இல்லை…
காரைக்குடி பேருந்து நிலையம் முன்பு, பெரம்பலூர்-ஆத்தூர் சாலையிலும் மாணவர்கள் சாலை மறியல்.
காரைக்குடி அழகப்பாவில் போலீஸ் அராஜகம்! போராடும் மாணவர்களை கலைக்கிறது போலீஸ்!
தமிழகத்தில் அனைத்து கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு