தமிழகத்தில் பல்வேறு முகாம்களில் இலங்கை தமிழர்கள் தங்கி உள்ளனர். மதுரை, ராமேஸ்வரம், மண்டபம் பகுதிகளில்
ஆஸ்திரேலியா நாட்டிற்கு தப்பி முயன்ற 28 பெண்கள், 10 ஆண்கள், 13 குழந்தைகள் உள்பட மொத்தம் 51 பேர் 3 வேன்களில் குமுளி வழியாக செல்வதற்கு முயன்றனர்.
கேரள போலீசார் இது குறித்து தமிழக கியூ பிராஞ் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் குமுளி சென்று தேக்கடி ரோட்டில் தங்கியிருந்த தமிழர்களை கம்பம் கொண்டு வந்து ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இவர்களிடம் விசாரணை நடத்திய பின் மீண்டும் அவர்கள் தங்கியிருந்த முகாமிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
அதே வேளை, பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாமில் திருமணம் ஆனவர்களுக்கு திருமண பதிவு செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் உள்ளது இலங்கை அகதிகள் முகாம். இந்த முகாமில் 1024 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிப்பவர்களில் திருமணம் ஆகி பதிவு செய்யாதவர்களுக்கு முகாமிலேயே நேற்று திருமண பதிவு செய்யப்பட்டது.
மாவட்ட பதிவாளர் வெங்கடேசன் தலைமையில் துணை பதிவாளர் பால்ராஜ் ஆகியோர் பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாமிற்கு வந்து அங்கேயே திருமண பதிவு செய்தனர்.
தமிழகத்தில் அடிமைகள் போல அடிப்படை வசதிகள் கூட இனறி அகதிகளாகியுள்ள ஆயிக்கணக்கான தமிழர்களை யாரும் கண்டுகொள்வதில்லை.