Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழகத்திற்கு எதிராக கர்நாடகாவில் நாளை பந்த்.

மாபெரும் தமிழினத் துரோக மாநாடு ஒன்றை கோவையில் மக்கள் வரிப்பணத்தில் கருணாநிதி நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், ஓகேனக்கல் குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடக மாநிலத்தில் தமிழகத்திற்கு எதிராக நாளை பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த

நிலையில் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் நாளை பந்த் நடத்த வேதிகே உள்ளிட்ட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.இதையடுத்து தமிழகத்திலிருந்து கர்நாடகம் செல்லும் பேருந்துகள், வாகனங்கள் இன்று மாலைக்கு மேல் கர்நாடகம் செல்லாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக பன்னாரி எல்லைப் பகுதியுடன் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓசூர் வழியாக செல்லும் வாகனங்களும் நிலைமையைப் பொறுத்து அனுமதிக்கப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது. இந்நிலையில் கருணாநிதி மக்கள் பிரச்சனை உள்ளிட்ட எந்த பிரச்சனையிலும் அக்கறை கொள்ளாமல் செம்மொழி மாநாட்டை தனக்கான விளம்பர மாநாடாக நடாத்தவே விரும்புகிறார்.

Exit mobile version