Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழகத்தின் 40 தொகுதிகளின் வெற்றி நிலவரம்: முழு விபரம்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் மே 13ந் தேதி நடந்தது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன.
இதில் திமுக 21 இடங்களிலும், காங்கிரஸ் 16 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள் 2 இடங்களிலும், முஸ்லிம் லீக் ஒரு இடத்திலும் போட்டியிட்டன.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக மதிமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் போட்டியிட்டன.

இதில் அதிமுக 23 இடங்களிலும், பாமக 7 இடங்களிலும், மதிமுக 4 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகியவை தலா 3 இடங்களிலும் போட்டியிட்டன.விஜயகாந்தின் தே.மு.தி.க. மற்ற தேர்தல்களைப் போலவே இந்த தேர்தலிலும் தனித்து 40 தொகுதிகளிலும் போட்டியிட்டது.

பாரதீய ஜனதா கட்சி சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து களத்தில் நின்றது.

இதில் பாரதீய ஜனதா கட்சி 13 இடங்களிலும், சமத்துவ மக்கள் கட்சி 5 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம், நாடாளும் மக்கள் கட்சி ஆகியவை தலா 2 இடங்களிலும் போட்டியிட்டன.

இவர்கள் தவிர மனிதநேய மக்கள் கட்சி 4 தொகுதிகளிலும், புதிய தமிழகம் தென்காசி தொகுதியிலும் போட்டியிட்டன.

திமுக கூட்டணி வெற்றி நிலவரம்

திமுக கூட்டணி 26 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

திமுக

1. நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 25 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் காந்தி செல்வன் வெற்றி பெற்றுள்ளார்

2.ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் கே.சிவக்குமார் என்ற ரித்திஷ் 69,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

3. தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் (தி.மு.க.) துரை. பாலகிருஷ்ணன் (ம.தி.மு.க.) டாக்டர் ப. ராமநாதன் (தே.மு.தி.க.), எஸ். சரவணன் (பகுஜன் சமாஜ் கட்சி) மற்றும் 9 சுயேச்சைகள் போட்டியிட்டனர்.

இதில் திமுக வேட்பாளர் பழனி மாணிக்கம் 10 ஆயிரத்து 500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

4.மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதியில்37 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

5.நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் ஆ.ராசா (தி.மு.க.) டாக்டர் சி.கிருஷ்ணன் (ம.தி.மு.க.) குருமூர்த்தி (பா.ஜனதா) செல்வராஜ் தே.மு.தி.க.) எம்.கிருஷ்ணன் (பகுஜன் ஜமாஜ் கட்சி) பத்ரன் (கொங்கு நாடு முன்னேற்ற கழகம்) மற்றும் 8 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளரும், மத்திய அமைச்சருமான ஆ.ராசா 85 ஆயிரத்து 547 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

6. கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் 22 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் ஜே.ஹெலன்

டேவிட்சன் 65,564 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

7. ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதியில் டி.ஆர்.பாலு (தி.மு.க.), ஏ.கே.மூர்த்தி (பா.ம.க.), அருண்சுப்பிரமணியம் (தே.மு.தி.க.), ராஜப்பா (பகுஜன் சமாஜ் கட்சி) மற்றும் 28 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 25, 544 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

8.தூத்துக்குடி பாராளுமன்ற தொகுயில் 15 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.ஜெயதுரை 76, 649 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

9.அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் 20 வேட்பாளர்கள் மற்றூம், சிறு கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

10.தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 21 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.1. ஆர். தாமரை செல்வன் (தி.மு.க.)2. டாக்டர் இரா. செந்தில் (பா.ம.க.)3. வி.இளங்கோவன் (தே.மு.தி.க.)4. வே.புருசோத்தமன் (பகுஜன் சமாஜ் கட்சி)5. கோ.அசோகன் (கொங்குநாடு முன்னேற்ற கழகம்).மற்றும் 16 சுயேச்சைகள், சிறு கட்சி வேட்பாளர்கள் என்று போட்டியிட்ட 21 வேட்பாளர்களில் திமுக வேட்பாளர் ஆர்.தாமரைச்செல்வன் வெற்றி பெற்றுள்ளார்.

11.கிருஷ்ணகிரி தொகுதியில் மொத்தம் 16வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். 1. இ.ஜி.சுகவனம் (தி.மு.க.)2. நஞ்சேகவுடு (அ.தி.மு.க.)3. ஜி.பாலகிருஷ்ணன் (பா.ஜனதா)4. அன்பரசன் (தே.மு.தி.க.)5. வி.வி.மூர்த்தி (பகுஜன்சமாஜ் கட்சி)6. பி.எஸ்.சந்திரன் (கொங்கு இளைஞர் பேரவை)7. செல்வராஜன் (கொங்குநாடு முன்னேற்ற கழகம்)8. சக்திவேல் (லோக்ஜனசக்தி)9. கோவிந்தராஜன் (லட்சிய தி.மு.க.)மற்றும் 7 சுயேச்சைகள் என்று போட்டியிட்ட 16 வேட்பாளர்களில், திமுக வேட்பாளர் இ.ஜி.சுகவனம் வெற்றி பெற்றுள்ளார்.

12.பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் து.நெப்போலியன் (தி.மு.க,)கே.கே.பாலசுப்ரமணியன் (அ.தி.மு.க.) ,துரை.காமராஜ் (தே.மு.தி.க.),க.செல்வராஜ் (பகுஜன் சமாஜ் கட்சி)வக்கீல் ஆர்.ஸ்டாலின் (லோக்ஜன சக்தி)இரா. சுந்தரவிஜயன் (சமாஜ்வாடி கட்சி) மற்றும் 15 சுயேச்சைகள் போட்டியிட்டனர்.

இதில் திமுக வேட்பாளர் நடிகர் நெப்போலியன் வெற்றி பெற்றுள்ளார்.

13.நாகப்பட்டினம் பாராளுமனற தொகுதியில், ஏ.கே.எஸ்.விஜயன் (தி.மு.க.).எம்.செல்வராஜ் (இந்திய

கம்யூனிஸ்டு).மா.முத்துக்குமார் (தே.மு.தி.க.)கோ.வீரமுத்து (பகுஜன் சமாஜ் கட்சி)மற்றும் 3 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் ஏ.கே.எஸ். விஜயன் வெற்றி பெற்றுள்ளார்.

14, வட சென்னை பாராளுமன்ற தொகுதியில் டி.கே.எஸ். இளங்கோவன் (தி.மு.க.)தா.பாண்டியன் (இந்திய கம்யூனிஸ்டு)தமிழிசை சவுந்தரராஜன் (பாரதீய ஜனதா) யுவராஜ் (தே.மு.தி.க.)சாந்தா ஸ்ரீநி (பகுஜன்சமாஜ்)மற்றும் 24 சுயேச்சைகள் போட்டியிட்டனர்இதில் திமுக வேட்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றுள்ளார்.

15. திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில த.வேணுகோபால் (தி.மு.க.)ஜெ.குரு (பா.ம.க.)எஸ்.மணிகண்டன் (தே.மு.தி.க.)எஸ்.ஏ.ராஜாராம் (புதிய நீதி கட்சி)பி.கோவிந்தசாமி (பகுஜன் சமாஜ் கட்சி)பி.செல்வராஜ் (சமாஜ்வாடி கட்சி)அப்ரோஸ் உஸ்னா (லோக்ஜனசக்தி)மற்றும் 23 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் த.வேணுகோபால் 1,38,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

16.கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதியில் ஆதிசங்கர் (தி.மு.க.), தன்ராஜ் (பா.ம.க.), சுதீஷ் (தே.மு.தி.க.), விஜய டி.ராஜேந்தர் (லட்சிய தி.மு.க.), மற்றும் 25 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் ஆதி.சங்கர் வெற்றி பெற்றுள்ளார்.

17.மதுரை பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் மு.க.அழகிரி 1,40,985 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

மதுரை பாராளுமன்ற தொகுதியில் மு.க.அழகிரி (தி.மு.க.), பி.மோகன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) கவியரசு (தே.மு.தி.க.) தர்பார் ராஜா (பகுஜன் சமாஜ்) மற்றும் 8 சுயேச்சைகள் போட்டியிட்டனர்.இதில் திமுக தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி வெற்றி பெற்றுள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக்

1.வேலூர் பாராளுமன்ற தொகுதி திமுக சார்பில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் வேட்பாளர் அப்துல் ரகுமான் வெற்றி பெற்றுள்ளார்.

வேலூர் பாராளுமன்ற தொகுதியிலமற்றும் 24 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக சார்பில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் வேட்பாளர் அப்துல் ரகுமான் வெற்றி பெற்றுள்ளார்.

காங்கிரஸ்

1.சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் மொத்த 20 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.ப.சிதம்பரம் (காங்கிரஸ்)ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் (அ.தி.மு.க.) பர்வத ரெஜினா பாப்பா (தே.மு.தி.க.).தூதை செல்வம்

(சிவசேனா கட்சி) எம்.ஜி.தேவர் (பகுஜன் சமாஜ்) ராமசாமி (புதிய தமிழகம்)மற்றும் 14 சுயேச்சைகள் என்று போட்டியிட்ட 20 வேட்பாளர்களில் ப.சிதம்பரம் 3354 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

2.ஆரணி பாராளுமன்ற தொகுதியில் எம்.கிருஷ்ணசாமி (காங்கிரஸ்) முக்கூர் என்.சுப்பிரமணியன் (அ.தி.மு.க.) ஆர்.மோகன் (தே.மு.தி.க.) கே.சரவணகுமார் (புதிய நீதி கட்சி)ஏ.சங்கர் (பகுஜன் சமாஜ் கட்சி வி.அரிராஜ் (சமாஜ்வாடி)மற்றும் 7 சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர். இதில் காங்கிரஸ் வேட்பாளர் எம்.கிருஷ்ணசாமி வெற்றி பெற்றுள்ளார்.

3.தேனி பாராளுமன்ற தொகுதியில்ஆரூண் ரஷீத் (காங்கிரஸ்)தங்கதமிழ்செல்வன் (அ.தி.மு.க.)கவிதா (பகுஜன் சமாஜ்)பார்வதி (பா.ஜனதா)சந்தானம் (தே.மு.தி.க.)செல்வராஜன் (புதிய தமிழகம்)மற்றும் 16 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஆருண் ரஷீத் வெற்றி பெற்றுள்ளார்.

4.கடலூர் பாராளுமன்ற தொகுதியில் கே.எஸ்.அழகிரி (காங்.)எம்.சி.சம்பத் (அ.தி.மு.க)எம்.சி.தாமோதரன் (தே.மு.தி.க.)ஆரோக்கியதாஸ் (பகுஜன் சமாஜ்)மற்றும் 7 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.அழகிரி வெற்றி பெற்றுள்ளார்.

5.விருதுநகர் பாராளுமன்ற தொகுதயில் மாணிக் தாகூர் (காங்கிரஸ்), வைகோ (ம.தி.மு.க.), பாண்டியராஜன் (தே.மு.தி.க.), நடிகர் கார்த்திக் (அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி ), கனகராஜ் (பகுஜன் சமாஜ்) மற்றும் 11 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூர் 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

6.புதுச்சேரி மாநில பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நாராயணசாமி, ராமதாஸ் (பா.ம.க) விஸ்வேஸ்வரன் (பா.ஜனதா) அசனா (தே.மு.தி.க.)சோமசுந்தரம் (பகுஜன் சமாஜ் கட்சி) கோவிந்தசாமி (காமராஜர் தேசிய காங்கிரஸ்) மற்றும் 22 சுயேச்சைகள் போட்டியிட்டனர்.

இதில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி 85, 612 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

7.காஞ்சிபுரம் (தனி) பாராளுமன்ற தொகுதியில் வி.விஸ்வநாதன் (காங்), டாக்டர் இ.ராமகிருஷ்ணன் (அ.தி.மு.க.), டி.தமிழ்வேந்தன் (தே.மு.தி.க.), க.உத்திராபதி (பகுஜன் சமாஜ்) பக்கிரி அம்பேத்கர் (ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா)ஜவகர்லால் நேரு (லோக் ஜனசக்தி) மற்றும் 14 சுயேச்கைகள் போட்டியிட்டனர்.

இதில் காங்கிரஸ் வேட்பாளர் வி.விஸ்வநாதன் வெற்றி பெற்றுள்ளார்.

8.திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் என்.எஸ்.வி. சித்தன் (காங்கிரஸ்)பாலசுப்பிரமணி (அ.தி.மு.க.)பி.முத்துவேல்ராஜ் (தே.மு.தி.க.)சீனிவாசபாபு (பகுஜன் சமாஜ் கட்சி)மற்றும் 15 சுயேச்சைகள் போட்டியிட்டனர்.இதில் காங்கிரஸ் வேட்பாளர் சித்தன் 14 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

9. திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 21 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

எஸ்.ராமசுப்பு (காங்கிரஸ்)கே.அண்ணாமலை (அ.தி.மு.க.) எஸ்.மைக்கேல் ராயப்பன் (தே.மு.தி.க.)கரு.நாகராஜன் (சமத்துவ மக்கள் கட்சி) ரமேஷ் பாண்டியன் (பகுஜன் சமாஜ்)எஸ்.செய்யது இமாம் (சமாஜ்வாடி)மற்றும் 15 சுயேச்சைகள்.21 வேட்பாளர்களில் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.ராமசுப்பு வெற்றி பெற்றுள்ளார்.

விடுதலைசிறுத்தைகள்

1.சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனும், அதிமுக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் பொன்னுசாமியும், தேமுதிக சார்பில் சபா. சசிக்குமாரும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் என்.ஆர். ராஜேந்திரன் மற்றும் 9 சுயேச்சைகள் போட்டியிட்டனர்.

இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளன் 99414 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

அதிமுக கூட்டணி= 12 தொகுதிகளில் வெற்றி

அதிமுக

1.பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதயில் கு.சண்முக சுந்தரம் (தி.மு.க.), கே.சுகுமார் (அ.தி.மு.க.) பாபா ரமேஷ் (பாரதீய ஜனதா)கே.பி.தங்கவேல் (தே.மு.தி.க., தி.மூர்த்தி (பகுஜன் சமாஜ் கட்சி)செ.கிருஷ்ணகுமார் (தமிழ் தேசிய கட்ச, சுரேஷ் (சமாஜ்வாடி கட்சி,இ.உம்மர் (மனிதநேய மக்கள் கட்சிஎஸ்.டி.ரமீஜா பேகம் (சமதா கட்சிபெஸ்ட் எஸ்.ராமசாமி (கொ.நா.மு.க.)

மற்றும் 12 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் அதிமுக வேட்பாளர் கே.சுகுமார் வெற்றி பெற்றுள்ளார்.

2.தென்சென்னை பாராளுமன்ற தொகுதியில் சிட்லபாக்கம் ராஜேந்திரன் (அ.தி.மு.க.) ஆர்.எஸ்.பாரதி (தி.மு.க.) இல.கணேசன் (பா.ஜ.க. வீ.கோபிநாத் (தே.மு.தி.க.)மற்றும் 40 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் வெற்றி பெற்றுள்ளார்.

3.விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியிலக.சாமிதுரை (விடுதலை சிறுத்தைகள்) எம்.ஆனந்தன் (அ.தி.மு.க.)பி.எம்.கணபதி (தே.மு.தி.க.) எஸ்.பொய்யாது (பகுஜன் சமாஜ் கட்சி)க.தேவராஜ் (லோக் ஜனசக்தி கட்சி)ஆர்.பஞ்சநாதன் (ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா) மற்றும் 13 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் அதிமுக வேட்பாளர் எம்.ஆனந்தன் 2797 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

4.திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதியில் எஸ்.காயத்ரி (தி.மு.க.) பி.வேணுகோபால் (அ.தி.மு.க.) சுரேஷ்

(தே.மு.தி.க.)எம்.எஸ்.சுதர்சன் (ஐக்கிய ஜனதாதளம்) ஆனந்தன் (பகுஜன் சமாஜ் கட்சி)மற்றும் 9 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் அதிமுக வேட்பாளர் பி.வேணுகோபால் வெற்றி பெற்றுள்ளார்.

5.மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் மணிசங்கர் அய்யர் (காங்கிரஸ்) ஓ.எஸ்.மணியன் (அ.தி.மு.க) கார்த்திகேயன் (பா.ஜ.க)) பாண்டியன் (தே.மு.தி.க) ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி)மற்றும் 18 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் அதிமுக வேட்பாளர் ஓ.எஸ்.மணியன் வெற்றி பெற்றுள்ளார்.

6.திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில்எஸ்.கே.கார்வேந்தன் (காங்கிரஸ்)சி.சிவசாமி (அ.தி.மு.க.)எம்.சிவக்குமார் (பா.ஜனதா)என்.தினேஷ்குமார் (தே.மு.தி.க.)கே.பாலசுப்பிரமணியன் (கொ.நா.மு.க.என்.சிவக்குமார் (உழைப்பாளி மக்கள் கட்சிஎம்.தங்கவேல் (லோக் ஜனசக்தி)மற்றும் 14 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் அதிமுக வேட்பாளர் சி.சிவசாமி வெற்றி பெற்றுள்ளார்.

7.திருச்சி பாராளுமன்ற தொகுதியில் சாருபாலா தொண்டைமான் (காங்கிரஸ்)குமார் (அ.தி.மு.க)லலிதா குமாரமங்கலம் (பாரதீய ஜனதா) ஏ.எம்.ஜி. விஜய்குமார் (தே.மு.தி.க)கல்யாண சுந்தரம் (பகுஜன் சமாஜ் கட்சி)நீலமேகம் (சமாஜ்வாடி கட்சி) மன்சூர் அலிகான் (லட்சிய தி.மு.க.மற்றும் 17 சுயேச்சைகள் போட்டியிட்டனர்.இதில் அதிமுக வேட்பாளர் குமார் 3400 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

8.கரூர் பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 38வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.1. கே.சி.பழனிசாமி (தி.மு.க.2. தம்பிதுரை (அ.தி.மு.க.3. ஆர்.ராமநாதன் (தே.மு.தி.க.4. லோகநாதன் (சமதா கட்சி5. தர்மலிங்கம் (பகுஜன் சமாஜ் கட்சிமற்றும் 33 சுயேச்சைகள், சிறு கட்சி வேட்பாளர்கள்.இவர்களில் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை வெற்றி பெற்றூள்ளார்.

9.சேலம் பாராளுமன்ற தொகுதியில கே.வி.தங்கபாலு (காங்கிரஸ்)செம்மலை (அ.தி.மு.க.) பாலசுப்பிரமணி (பகுஜன் சமாஜ் கட்சி) அசோக் சாம்ராஜ் (கொங்கு நாடு முன்னேற்ற கழகம்) அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ் (தேமுதிக)மற்றும் 18 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் அதிமுக வேட்பாளரும், முன்னாள் மாநில அமைச்சருமான செம்மலை, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவை விட 46252 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

மதிமுக

1.ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் மதிமுக வேட்பாளர் அ.கணேச மூர்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட்

1தென்காசி பாராளுமன்ற தொகுதியில் ஜி.வெள்ளைப்பாண்டி (காங்கிரஸ்) பி.லிங்கம் (இந்திய கம்யூனிஸ்டு) கே.இன்பராஜ் (தே.மு.தி.க.)டாக்டர் கே.கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) கே.கிருஷ்ணன் (பகுஜன் சமாஜ்)மற்றும் 4 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.லிங்கம் வெற்றி பெற்றுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்

1.கோவை பாராளுமன்ற தொகுதியிலஆர்.பிரபு (காங்கிரஸ்) ஜி.கே.எஸ்.செல்வக்குமார் (பாரதீய ஜனதாபி).ஆர்.நடராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு)ஆர்.பாண்டியன் (தே.மு.தி.க.)பி.கதிர்மணி (சமாஜ்வாடி கட்சி)கே.ராமசுப்பிரமணியம் (பகுஜன் சமாஜ் கட்சி)எம்.செல்வம் (சிவசேனா)ஈ.ஆர்.ஈசுவரன் (கொ.நா.மு.க.)மற்றும் 17 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் 38664 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

(நக்கீரன்)

Exit mobile version