Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தன்னார்வ நிறுவனங்களின் தலையீடின்றித் தொடரும் பல்கலைகழக ஆசிரியர்கள் போராட்டம்

இலங்கையில் பல்கலைகழகப் பேராசிரியர்களின் போராட்டம் சரணடைவுகளுக்கும் விட்டுக்கொடுப்புக்களுக்கும் அப்பால் தொடர்கிறது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் மேற்கு அரசுகளின் தலையீடுகள் இன்றி மிக நீண்ட காலத்தின் பின்னர் இவ்வாறான ஒரு போராட்டடம் நடைபெறுகிறது.
பல்கலைக்கழக பேராசிரியர் சங்கத் தலைவருக்கு நிர்மால் ரஞ்சித் தேவசிறிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
மக்களிடம் பண உதவி பெற்றே இந்தப் போராட்டத்திற்கான செலவுகளை ஈடு செய்கின்றனர். கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணப் பல்கலைகழகங்கள் உட்பட இலங்கை முழுவதும் இந்தப் போராட்டம் நடைபெறுகின்றது.
போராட்டத்தை எதிர்கொள்ள முடியாத மகிந்த பாசிசம் பலதடவை விரிவுரையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது.
பல்கலைக்கழக பேராசிரியர்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை ஐந்து கால வரையறுக்குள் நிறைவேற்றுவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக திறைசேரியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டத்துடன் இந்த கால வரையறை ஆரம்பமாகின்றது. நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு அதனுடன் தொடர்புடைய அரச நிறுவனங்கள் மற்றும் பேராசிரியர்களின் ஒன்றியம் ஆகியன ஒன்றாக இணைந்து இந்த செயற் திட்டம் அமுல்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, திறைசேரியின் செயலாளர் அனுப்பி வைத்த கடிதம் கிடைத்தன் பின்னர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் இன்று நீண்ட நேரம் கலந்தாலோசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வேளையில் மனித் உரிமைக்கான யாழ் பல்கலைகழக ஆசிரியர் சங்கம் என்று அழைக்கப்பட்ட தன்னார்வ நிறுவனத்தைக் காணக்கிடைக்கவில்லை.

Exit mobile version