Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு எதிராக விழிப்பாயிருப்போம் : இலங்கை

அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலங்கை கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது. இடைத்தங்கல் முகாம் நிலைவரங்கள் தொடர்பில் உண்மையை அறிந்து கொள்ளாது அமெரிக்கா கருத்து வெளியிட்டு வருவதாக அரசாங்கப் பாதுகாப்புப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியத்திற்கõன பிரதி இராஜாங்கச் செயலாளர் பதவியை பொறுப்பேற்றுக் கொள்வதற்கு முன்னர் ரொபர்ட் ஓ பிளெக் முகாம்களுக்கு விஜயம் செய்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அகதி முகாம் நிலைவரங்களை நேரில் பார்வையிட்டவர் என்ற வகையில் இலங்கை மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் ஏற்புடையதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஏனைய உயர் ராஜதந்திரிகள் அகதி முகாம் நிலைவரங்கள் குறித்து திருப்தியடைந்துள்ள நிலையில், அமெரிக்கா தொடர்ச்சியாக விமர்சனங்களை வெளியிட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அண்மையில் முகாம்களுக்கு விஜயம் செய்திருந்ததாகவும், முகாம் சூழ்நிலை தொடர்பில் அவர் மகிழ்ச்சி வெளியிட்டிருந்ததாகவும் கெஹலிய குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்ட சில நாடுகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இலங்கையின் மீது தேவையற்ற வகையில் கட்டுப்பாடுகளை விதிக்க முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், இந்த நிலைமைகள் குறித்து இலங்கை அரசாங்கம் விழிப்புடன் செயற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு அபிவிருத்தி மற்றும் உதவி வழங்கும் போர்வையில் இலங்கை விவகாரங்களில் மூக்கை நுழைக்க சில வெளிநாட்டு சக்திகள் முயற்சி மேற் கொண்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கடுமையான விமர்சனங்களை வெளியிடுவதன் மூலம் சர்வதேச சக்திகள் சில நாடுகளின் மீது செலுத்திய ஆதிக்கம் தொடர்பில் இலங்கை விழிப்புடன் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். நிலக்கண்ணிவெடிகளை அகற்றித் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத் தும் வரையில் அகதி முகாம் மக்களை மீளக் குடியமர்த்த முடியாது என அவர் திட்டவட் டமாக அறிவித்துள்ளார்.

யுத்தம் நிறைவடைந்து சில மாதங்களே ஆகின்றன எனவும், மீள் குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

Exit mobile version