Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தனி நபர்கள் சிலரின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தேர்தல் வன்முறையின்றி நடைபெறுகின்றது.

ballot-boxஇன்று இலங்கையில் பாளுமன்றக் தேர்தல் முடிவுகள் இலங்கைச் சர்வாதிகாரி மற்றும் இனக்கொலையாளி மகிந்த ராஜபக்சவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். அதேவேளை கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும். தமிழ் சிங்களத் தீவிரவாதத்தை முன்மொழியும் இந்த இரண்டு அரசியல் வாதிகளும் எதிரும் புதிருமாக மோதிக்கொள்ளவில்லை. மகிந்த ராஜபக்ச ரனில் விக்ரசிங்கவிற்கு எதிராகவும், கஜேந்திரகுமார் தான் உருவாக்கிய எதிரி சுமந்திரனுக்கு எதிராகவும் போட்டியிட்டு தமது வாக்கு வங்கிகளை நிரப்பிக்கொள்கின்றனர்.

மூன்று தசாப்தங்கள் நடைபெற்ற ஆயுதப் போராத்தின் முழுமையான அழிவின் பின்னர் நடைபெறும் இரண்டாவது தேர்தல் இது.

கொழும்பைச் சார்ந்த மேட்டுக்குடிப் பணக்காரர்களான கஜேந்திரகுமார் மற்றும் சுமந்திரன் ஆகியோரிடையான போட்டி போன்று புலம்பெயர் நாடுகளில் உருவமைக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்ட இத் தேர்தல் வன்முறைகள் எதுவுமின்றி நடைபெறுகிறது.

நான்கு தசாப்த இழப்பையும் நெருப்பையும் வெறும் வாக்குத் திரட்டி ஒற்றையாட்சிப் பாராளுமன்றத்திற்குச் செல்லும் நோக்கத்திற்குப் பயன்படுத்துவதும் அவலம் தமிழ்ப் பேசும் பகுதிகள் இடம்பெறுகின்றது.

Exit mobile version