ஆனால் இலங்கைப் பிரச்சினையில் தனி ஈழம் அமைப்பதை இந்திய மத்திய அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.இலங்கையும், இந்தியாவும் தனி நாடுகளாக இருந்த போதும், நாட்டினுள்ளேயே தனி நாடுகள் கேட்பது இறையாண்மைக்கு எதிரானது. ஆனபோதும், இலங்கையில் உள்ள தமிழர்களின் நலனுக்காக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அவர்களுக்கும் சிங்கள இனத்தவர்களுக்கும் இணையான சம அதிகார பகிர்வு, சம அந்தஸ்த உறுதியாக கிடைக்க இந்திய மத்திய அரசு பல்வேறு முனைப்புகளை காட்டி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ்ப் பேசும் மக்கள் தமக்கு எவ்வகையான தீர்வு தேவை என்பதை அவர்களே தீர்மானிப்பார்கள். இந்திய அரசோ, தமிழ் நாட்டின் இனவாதிகளோ, சிங்கள அரசோ, மேற்கின் ஏகாதிபத்தியங்களோ, புலம்பெயர் ‘தேசிய’ வியாபாரிகளோ இதனைத் தீர்மானிக்க எந்த உரிமையும் கிடையாது.