இந்த சம்பவத்தால் கோபமடைந்த அப்பகுதி மக்கள், விபத்துக்குக் காரணமாக இருந்த பள்ளிப் பேருந்தை தீயிட்டுக் கொளுத்தினர். பேருந்து கொழுந்துவிட்டு எரிந்ததால், தாம்பரம் – முடிச்சூர் சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஸ்ருதியின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையிலிம் தனியார் கல்வி நிலையத்தின் பணப்பசிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும் சென்னை தாம்பரத்திலிருந்து சிறுமியின் வீடு உள்ள முடிச்சூர் வரை ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட பேரணி நடத்தப்பட்டது.
இந்தியாவிலும் தமிழ் நாட்டிலும் தனியார் மயப்படுத்தப்படும் கல்வி சீர்குலைக்கப்படுகின்றது. மனித உயிர்கள் விலைபேசப்படுகின்றன. மேற்கின் பொருளாதார நெருக்கடி அங்கு ஏழைகளை உருவாக்குவதைப் போன்று மூன்றாம் உலக நாடுகளில் முதலாளித்துவத்தின் நவ தாராளவாத பொருளாதாரக் கொள்கை கொலைகளையும் கொலைக் கலாச்சாரத்தையும் உருவாக்குகின்றது.
தொடர்புடைய பதிவுகள் :