Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தனிமைப்படுத்தப்பட்டுள்ள இடிந்தகரை மக்களுக்கு தூத்துக்குடி மக்கள் 4 தொன் உணவுப்பொருட்கள்

முள்ளிவாய்க்காலை இலங்கை அரசு அப்பாவி மக்களைத் தனிமைப்படுத்தி அழித்ததுபோல் இந்திய மத்திய அரசு ஜெயலலிதா அரசுடன் இணைந்து இடிந்தகரை மக்களைத் தனிமைப்படுத்தியுள்ளது. அங்கு பால், உணவுப்பொருட்கள், மின்சாரம் போன்ற அத்தியாவ்சியப் பொருட்கள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. பல்லாயிரக்காணக்கில் மக்கள் வீடுகளுகுச் செல்லாமல் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்போருக்கு ஆதரவளிக்கின்றனர்.
இந்த நிலையில் கூட‌ங்குள‌ம் அணு‌மி‌ன் ‌நிலைய‌த்தை மூட‌க் கோ‌ரி போரா‌ட்ட‌ம் நட‌த்‌தி வரு‌ம் இடி‌ந்தகரை ம‌க்களு‌க்கு அ‌ரி‌சி, கா‌ய்க‌றி உ‌ள்‌ளி‌ட்ட அ‌த்‌தியாவ‌சிய பொரு‌ட்களை தூ‌த்து‌க்குடி ம‌க்க‌ள் அனு‌ப்‌பிவை‌த்து‌ள்ளன‌ர்.
இடி‌ந்தகரை ம‌க்களு‌க்கு ஆதரவாக தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் 3வது நாளாக இ‌ன்று‌ம் கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இ‌ந்த ‌நிலை‌யி‌ல் கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக கடலோர மக்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் தூத்துக்குடி பனிமய மாதா ஆலய வளாகத்தில் மக்கள் கையில் தேசிய கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
அப்போது கூடங்குளம், இடிந்தகரை உள்ளிட்ட கிராமங்களில் மக்களுக்கு தூத்துக்குடியில் அத்தியாவசிய பொருட்களை சேகரித்து வாகனத்தில் கொண்டு செல்வது என்று அறிவிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து தூத்துக்குடி திரேஸ்புரம், பூபால்ராயபுரம், மரக்குடி தெரு, பாத்திமாநகர், லயன்ஸ்டவுன், குரூஸ்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மீனவ ஆண்களும், பெண்களும் மற்றும் பொதுமக்கள் அரிசி, பருப்பு, புளி, பூண்டு, வெங்காயம், பழங்கள், எண்ணெய் டின், காய்கறிகள், தேங்காய், பால்பவுடர், குளுக்கோஸ், பாய், கைவிசிறி, மளிகை பொருட்கள், மருந்துகள், மசாலா பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான அத்தியாவசிய பொருட்களை நேற்று காலை முதலே தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்திற்கு கொண்டு வர தொடங்கினார்கள்.
இந்த பொருட்கள் அனைத்தும் மூடைகளில் கட்டப்பட்டு ஒரு லாரி, ஒரு மினி லாரி, 2 வேன்கள், 2 கார்களில் ஏற்றினார்கள். இவ்வாறு மொத்தம் 4 டன் அரிசி உள்ளிட்ட ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் லாரிகளில் ஏற்றப்பட்டன.
இந்த வாகனங்களில் பொருட்கள் அனைத்தும் ஏற்றப்பட்டதும் நே‌ற்று மாலை தூத்துக்குடி பனிமய மாதா ஆலயம் முன்பு இருந்து இடிந்தகரை நோக்கி புறப்பட்டு சென்றன.

Exit mobile version