Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தனது புதைகுழியைத் தானே தோண்டும் மகிந்த ராஜபக்ச

Mahinda_inioruஇலங்கையில் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்தவின் அச்சம் அவர் சூறையாடிய பணத்தின் ஒரு பகுதியை விழுங்கியுள்ளது. இலங்கை மக்களின் வரிப்பணத்தின் மற்றொரு பகுதி தேர்தலுக்காக வாரியிறைக்கப்பட்டுள்ளது. 10.5 பில்லியன் ரூபாய்கள் தேர்தலுக்காகச் செலவாகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவிர வெளி நாடுகளிலிருந்த உயர்மட்ட ராஜதந்திரிகளை மகிந்த தனக்கு ஆலோசனை வழங்கவும் பிர்ச்சாரம் மேற்கொள்ளவும் திருப்பியழைத்துள்ளார். மகிந்தவின் அழைப்பில் பலர் இலங்கை வந்தடைந்துள்ளனர்.
வன்னி இனப்படுகொலையின் பின்னர் தனக்கு ஆதரவாகப் பிரச்சாரம் மேற்கொள்ள மகிந்த ராஜபக்ச ராஜித செனிவர்த்னவின் ஊடாகச் செயற்பட்டார். பிரித்தனீயாவிலுள்ள பெல் பொட்டிங்டர் நிறுவனம் ராஜபக்ச ஆதரவுப் பிரச்சாரங்களை மேற்கொண்டது.இன்று ராஜித செனிவரத்ன எதிர்க்கட்சியில்.

மேற்கு ஏகாதிபத்தியங்கள் ராஜபக்சவைப் பயன்படுத்தி இனப்படுகொலையை நடத்தியது. பத்தாண்டுகள் ராஜபக்சவின் ஆட்சியில் இலங்கையை தனது தொடர்ச்சியான அதிகாரத்திற்கு உகந்த பிரதேசமாக மாற்றியது. இனிமேல் ராஜபக்சவை விட அதிக பலன் தரக்கூடிய மத்திரிபால சிரிசேனவை ஏகாதிபத்திய நாடுகள் ஆட்சியேற்ற விரும்புகின்றன.

இதுவரை இலங்கையில் ஆட்சியிலிருந்தவர்களில் இனக்கொலையாளி மகிந்த ராஜபக்சவும் அவரது குடும்பமுமே நாட்டை அதிகளவில் சூறையாடியுள்ளது.

இலங்கையிலிருந்தே பெல் பொட்டிங்கரோடு தொடர்புவைத்திருந்த ராஜித செனிவரத்னாவே அரசாங்கத்திலிருந்து மைத்திரிபாலவுடன் முதலில் எதிர்க்கட்சிக்குத் தாவியவர்.

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ள ராஜதந்திரிகள் பட்டியலில் அவுஸ்திரேலியாவிற்கான இலங்கைத் தூதர் அட்மிரல் திஸ்ச சமரசிங்க, ஜப்பானியத் தூதர் அட்மிரல் வசந்த கரன்னாகொட, ரஷ்யத் தூதர் உதயங்க வீரதுங்க ஆகியோர் உட்படப் பலர் அடங்குவர்.

இக்குழாமில் ரஜித செனிவரத்ன போன்ற பலர் ராஜபக்சவிற்குக் குழிபறிக்கக் காத்திருக்கலாம்.

மகிந்ததவின் அழிவில் புதிய கொள்ளையர்களும் பேரினவாதிகளும் ஏற்கனவே உருவாக்கப்பட்டுவிட்டார்கள்.
தேர்தல் என்பதும் பாராளுமன்றம் என்பதும் திருடர்களுக்கும் கொலையாளுக்குமான கூடாரம். ஏமாற்றப்படும் மக்கள் புதிய ஜனநாயகத்திற்காகப் மக்களை அணிதிரட்டிக்கொள்வது தவிர்க்க முடியாது என்பதையே இத் தேர்தல் அரசியல் பாடமாகக் கற்பிக்கிறது. தமிழ்ப் பேசும் மக்களின் பிரிந்து செல்லும் உரிமைக்கான போராட்டமும் சிங்கள மக்கள் மத்தியிலான வர்க்க ஒடுக்குமுறக்கான போராட்டமும் சமாந்தரமாக முன்னெடுக்கப்படவேண்டிய அரசியல் பாடத்தைத் தேர்தல் கற்றுத்தருகிறது.

Exit mobile version