தந்தேவடாவில் மாவோயிஸ்ட் மீண்டும் தாக்குதல்- 50 பேர் பலி.
இனியொரு...
சத்தீஸ்கர் மாநிலம் தந்தேவாடாவில் ஒரு பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது மாவோயிஸ்டுகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் கவலர்கள் போலீஸ் இன்பார்மர்கள் உள்ளிட்ட ஐமப்து பேர் வரை கொல்லபப்ட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 40 நாட்களுக்குள் மாவோயிஸ்டுகள் நடத்தியுள்ள இரண்டாவது பெரிய தாக்குதல் சம்பவம் இது. சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா பகுதியிலிருந்து தந்தேவாடா பகுதிக்கு ஒரு பயணிகள் பஸ் திங்கள்கிழமை மாலை சென்றுகொண்டிருந்தது. காதிராஸ் - புசாரஸ் பகுதிக்கு இடையே மாலை 4.45 மணியளவில் பஸ் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது சாலையில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்துச் சிதறியது. இதில் பயணிகள் பஸ் தகர்க்கப்பட்டது. பல அடி உயரம் பஸ் மேலே பறந்து கிழே விழுந்து சிதறியது. இந்த தாக்குதலில் பஸ்ஸில் பயணம் செய்த 50 பேர் பலியாயினர். இதில் நக்ஸல்களுக்கு எதிராக போலீஸôருக்கு உதவி செய்துவந்த சிறப்பு போலீஸ் அதிகாரிகளும் (எஸ்பிஓ) அடங்குவர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் போலீசார் .சாலையில் புதைக்கப்பட்டிருந்த ஐஇடி வகையிலான வெடிகுண்டை பஸ் வரும்போது ரிமோட் கண்ட்ரோல் மூலம் நக்ஸல்கள் வெடிக்கச் செய்துள்ளனர்.சாஅலை முழுவதும் இறந்து கிடந்தவர்களின் சடலங்கள் சிதறிக் கிடந்தன. பெரும்பாலானோரின் சடலங்கள் வெடிகுண்டு தாக்குதலில் சிதறிவிட்டன. கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி தந்தேவாடாவில் மத்திய ஆயுதப் படை போலீஸ் (சிஆர்பிஎஃப்) வீரர்கள் மீது நக்ஸல்கள் தாக்கியதில் 76 வீரர்கள் கொல்லப்பட்டனர். சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் 48 மணி நேர முழு அடைப்புப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை காலை முதல் நடத்தப் போவதாக மாவோயிஸ்டுகள் அறிவித்திருந்தனர். முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஒரு நாள் முன்னதாகவே தாக்குதலை மாவோயிஸ்டுகள் தொடங்கியுள்ளனர்.
பழங்குடி மக்கள் மீது விமானத் தாக்குதல்?
பிரிட்டனை தலைமையிடமாகக் கொண்டியங்கும் வேதாந்தா என்னும் கனிம நிறுவனம் தண்டகாரண்யாவை அண்டிய காடுகளில் உள்ள பாக்ஸைட் தாதுகளை எடுத்துக் கொள்ள இந்திய அரசுடன் நூற்றுக்கணக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை போட்டுள்ளன. இம்மலைப் பகுதிகள் வாழும் பழங்குடி மக்களோ இந்தக் காடும் மலையும் எங்களுக்கானது. என்று வேதாந்தா நிறுவனத்தை மலைகளை நெருங்க விடாமல் பாதுகாக்கின்றனர். ஆனால் இந்திய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வேதாந்த நிறுவனத்தின் முன்னாள் வழக்கறிஞராக தொழிற்பட்டதோடு அவரது குடும்பத்தினருக்கு வேதாந்தாவில் பங்கு இருப்பதாகவும் சொல்லப்படுகிற நிலையில் பழங்குடி மக்கள் மீதான இந்தப் போரை நடத்திய தீர்வது என்கிற தனிப்பட்ட விருப்பில் சிதம்பரம் இருக்கிறார். பழங்குடி மக்களுக்கு ஆதரவாக மாவோயிஸ்டுகள் போராடி வருகிறார்கள். இநிநிலையில் பழங்குடி மக்கள் மீதும் மாவோயிஸ்டுகள் மீதும் விமானத் தாக்குதலை நடத்த மத்திய அரசு திட்டமிட்டிருபப்தாக தகவலகள் தெரிவிக்கின்றன. அப்படி ஒன்று நடந்தால் முள்ளிவாய்க்காலில் நம் மக்கள் மீது வீசப்பட்ட அதே ரசாயனக்குண்டுகள் தண்டகாரண்யா காடுகளில் வாழும் பழங்குடி மக்கள் மீதும் வீசப்படும். ஆகவே ஒடுக்கபப்டுகிற தேசிய இனத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் பழங்குடி மக்கள் மீதான போருக்கு எதிராக தங்களின் குரல்களை உயர்த்த வேண்டும்.