Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தண்ணீர் கேட்டவர்கள் பயங்கரவாதிகளாக்கப்பட்டனர் : புலம்பெயர் தமிழர்களுக்குச் சவால்

யாழ்ப்பாணத்தின் நீர் வளம் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது. இனச்சுத்திகரிப்பும் பல்தேசியப் வியாபாரிகளின் பயங்கரவாதமும் கைகோர்த்து தமிழ்ப் பேசும் மக்களின் வாழ்வாதரத்தை அழித்து வருகின்றது. பிரித்தானிய ஆளும் கட்சியின் ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினரான நிர்ஜ் தேவா என்ற இலங்கையர் இயக்குனராகச் செயற்படும் நிறுவனமே யாழ்ப்பாணத்தை வரண்ட பூமியாக்கும் சமூகவிரோதச் செயற்பாட்டின் பின்புலத்தில் செயற்படுகின்றது. நிர்ஜ் தேவா என்பவர் சுற்றுச் சூழல் குற்றச் செயலில் ஈடுபடுவது தொடர்பாக ஐரோப்பியப் ஒன்றியத்தின் லண்டன் அலுவலகத்தில் நீதிகேட்கும் போராட்டம் ஒன்றை பறை-விடுதலைக்கான குரல் என்ற அமைப்பு ஒழுங்கு செய்துள்ளதாக அறியத்தருகிறது. எதிர்வரும் திங்கள் மாலை 3 மணிக்கு நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்குகொள்ளுமாறு அழைக்கப்படுகின்றனர்.

 The Uk Office Of The European Parliament

சுத்தமான குடிநீர் கேட்டு வழக்குத் தாக்கல் செய்தவர்கள் பயங்கரவாதிகளாக்கப்பட்டுள்ளனர்

சுன்னாகம் வாழ் மக்கள் தமது குடிநீரை “நொதேன் பவர் கம்பனி (பிறைவற்) லிமிற்ரெட்” கழிவு எண்ணெயால் மாசுபடுத்துவதை நிறுத்தக்கோரி தாக்கல் செய்த‚ வழக்கினை தென்னிலங்கை மின்னுற்பத்திக் கம்பனி பயங்கரவாதமாகச் சித்தரித்துள்ளது.

கிணறுகளில் “கழிவு எண்ணெய்” கலந்த நிலையில் வாழ்வதில் அவதியுறும் வலி –வடக்கு, வலி-தெற்கு மக்கள் மல்லாகம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கினை அரசியல் மயப்படுத்தும் “நொதேண் பவர் கம்பனி (பிறைவற்) லிமிற்ரெட்” வழக்கு மனுதார்களையும், வழக்குத் தாக்கல் செய்த சட்டத்தரணிகளையும் “பயங்கரவாதிகள்” எனச் சத்தியக் கூற்றில் மிரட்டியுள்ளது!!!

தமது கிணறுகளில் “கழிவு எண்ணெய்” கலந்தது தொடர்பாக ”நொதேண் பவர் கம்பனி (பிறைவற்) லிமிற்ரெட்,” இலங்கை மின்சார சபை (உதுறு ஜெனனி), பிரதம பொறியியலாளர் உதுறு ஜெனனி என்பவர்களுக்கு எதிராக 11 பேரினால் தொடரப்பட்ட வழக்கில் சுண்ணாகத்தில் இயக்கப்படும் மின் பிறப்பாக்கிகளை தொடர்ந்தும் இயக்குவதை தடைசெய்யக் கோரியிருந்தனர்.

வழக்கிற்கு “நொதேண் பவர்” கம்பனியின் முகாமையாளர் 27.11.2014 வியாழனன்று அணைத்துள்ள சத்தியக்கூற்றில் பின்வரும் இரண்டு விடயங்களை முக்கியமாகக் குறிப்பிட்டுள்ளார்:

பந்தி – 9 இல் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது

(9) பயங்கரவாதத்தால் மீட்கப்பட்ட வடக்கு மக்களை தற்போது அனுபவிக்கும் சமாதானம், மற்றும் வாழ்க்கை நிலைமையினை சீர் குலைப்பதற்கு செயற்பாட்டானர்களினால் வடக்கு பிரதேசத்தில் மற்றும் இந்த பிரதேச மக்களுக்கு நிரந்தமைான மின்சபார விநியோகத்தை செயலிழக்கச் செய்வதற்கு இதனூடாக உறுதிப்படுத்தி முறையற்ற நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக கோவைப்படுத்தப்பட்டுள்ள பொறுத்தமற்ற விண்ணப்பம் ஆகும்.

பந்தி -11 இல் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:

இலங்கைக்குள், இலங்கை குடியரசின் அரசியல் யாப்பு சட்டத்தின்கீழ் செயற்படுகின்ற நீதிமன்றம் என்ற வகையிலே எல்.டி.டி.. பயங்கவைாத அமைப்புக்களுடன் தொடர்புடைய சமாதானத்தை சீர்குலைக்கின்ற குழுக்களில் அங்கத்துவம் வகிக்கும் அல்லது அவர்களைச் செயற்படுத்தும் நிறைவுப் பொருளாதாரத்திற்குப் பங்கம் விளைவிக்கும் இதுபோன்ற வழக்கொன்றில் தற்காலிக கட்டளை மற்றும் நிரந்தரகட்டளையுடான சலுகைகளை கேட்டுக்கொள்ளவோ அல்லது பெற்றுக்கொள்ளவோ முடியாது.”

குறிப்பு:

தமிழ், எழுத்து, சொல், இலக்கணப் பிழைகள் மலிந்த இந்த சத்தியக் கூற்றினை சுண்ணாகத்தைச் சேர்ந்த என். சண்முகவேல் என்ற சத்திய ஆணையாளர் தனக்கு வாசித்து தெளிவுபடுத்தியதின் பின்னர் தான் கையொப்பமிடுவதாகநொதேண் பவர்கம்பனியின் முகாமையாளர் கையொப்பமிட்டுள்ளார்!

பந்தி – 9 இனைப் பொறுத்தமட்டில், யாழ் குடாவுக்கு மேலதிகமான மின் சக்தியானது மத்திய வலையமைப்பிலிருந்து விநியோகிக்கப்படுவது இலங்கை மின்சார சபையால் உறுதிப்படுத்தப்பட்டது.

இந்தநிலையில், சுண்ணாகத்தில் ஏன் எண்ணெய் எரிவுடாக இயங்கும் மின் பிறப்பாக்கிகள் இயக்கப்படுகின்றன? இது எவர்களின் வருவாய்க்காகச் செய்யப்படுகிறது என்பது முக்கியமானது!

இவற்றுள் பந்தி – 11 இல் கூறப்பட்டிருப்பவைகள் பாதிக்கப்பட்ட மனுதாரர்களையும், வழக்குத் தாக்கல் செய்யத சட்டத்தரணிகளையும் எல் டி. டி. ஈ பயங்கரவாதிகளாகக் கைது செய்யப்படுவர் என மறைமுகமாக மிரட்டுவதாக அமைகிறது!

ஒரு நீதி மன்றச் சத்தியக் கூற்றில் இப்படிப் பகிரங்கமாக மிரட்டுவது, இந்தக் மின் உற்பத்திக் கொம்பனியுடன் இலங்கை அரசின் மிக மிக்கியமான ஒருவர் தொடர்பாக இருப்பதைத்தான் உறுதிப்படுத்துவதுடன் அவரின் மிரட்டுகை இந்தச் சத்தியக்கூற்றூடாக வெளிவருவதுதான் உறுதியாகிறது! மட்டுமல்ல சிங்கள தேசத்தவர்கள் கற்றுத் தொழில்முறை சார்ந்தவர்களாக இருந்தாலென்ன, சாதாரண மக்களாக இருந்தாலென்ன, அவர்கள் இன்று சிங்கள தேரவாத பௌத்தத் தேசியவாதத்தில் மூழ்கியவர்களாகவே உள்ளனர். தமிழர்களைப் பயங்கரவாதிகளாவே கருதுகின்றனர்.

இது உண்மை நிலையாக இருக்கும்போது, அபிவிருத்தி என்ற கோசத்தில் இணக்க அரசியல் பேசுகின்றவர்களையும், தமிழர் உரிமைகள் என்ற கோசத்தில் ஜனதிபதி தேர்தலில் ஆதரவு பற்றிப் பேசுகின்றர்வர்கள் பற்றியும் என்ன கூறமுடியும்?

Exit mobile version