Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தணிக்கை செய்யப்பட்ட இனப்படுகொலை

இலங்கை தொடர்பான மீளாய்வு அறிக்கையின் சில பகுதிகள் தணிக்கை செய்யப்பட்டமை சரியானதே என ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. 2009ம் ஆண்டு இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் அமைப்பின் நடவடிக்கைகள் தொடர்பில் மீளாய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கையில் ஐக்கிய நாடுகள் அமைப்பு பொதுமக்களைப் பாதுகாக்கத் தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பணியாளர்களை பாதுகாக்கவும், சில இரகசிய ஆவணங்களைப் பாதுகாக்கவும் மீளாய்வு அறிக்கையின் சில பகுதிகளை தணிக்கை செய்ததாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் உயரதிகாரி சுசனா மெல்கொரா தெரிவித்துள்ளார். சில தகவல்கள் உள்ளகத் தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவும் அவற்றை பகிரங்கப்படுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நூறாயிரம் மக்களின் உயிர்களைவிட, அவர்களைக் கொன்றொழித்தவர்கள் தண்டிக்கபடுவதை விட ஐ.நாவின் உள்ளகத் தேவை பிரதானமானது என்று கருதப்படுகிறது போலும்.

Exit mobile version