உரிய தரத்திற்கு அமைய உற்பத்தி செய்யப்படாத மருந்துப் பொருட்களை விநியோகம் செய்தமைக்காக இந்தியாவின் ஆறு முக்கிய மருந்துப் பொருள் உற்பத்தியாளர்களை கடந்த நவம்பர் மாதம் இலங்கை கறுப்புப் பட்டியல் படுத்தியது.
எனினும், குறித்த ஆறு மருந்துப் பொருள் உற்பத்தியாளர்களும் இரண்டு ஒரு மாத கால இடைவெளிக்குள் மீண்டும் இலங்கைக்கு மருந்துப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் பணிகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காலம் கடந்த மருந்துப் பொருட்கள், தடுப்பூசிகளில் இறப்பர் மற்றும் கண்ணாடீத் துகள்கள் காணப்பட்டமை என பல்வேறு குற்றச் சாட்டுக்கள் குறித்த நிறுவனங்கள் மீது சுமத்தப்பட்டிருந்தது.
தமது மருந்துப் பொருள் உற்பத்திகளின் தரம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தினை திருப்திபடுத்தியுள்ளதாக தடை செய்யப்பட்ட மருந்து உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான பெல்கோ பார்மா நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்திய மருந்துப் பொருள் உற்பத்தி நிறுவனங்கள் வருடாந்தம் இலங்கைக்கு 3.5 பில்லியன் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்களை ஏற்றுமதி செய்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
-உலக தமிழ் செய்திகள்