முன்னாள் புலி உறுப்பினர் அல்லது புலி உறப்பினர்கள் என சந்தேகிக்கப்பட்டவர்களில் ஒருவரான டாக்டர் குமாரசாமி முரளிதரன், தாம் ஒரு போதும் சண்டையிடவில்லையெனக் கூறியுள்ளார். நாம் உரிமைகளை விரும்பினோம், சமாதானத்துடன் இங்கு வாழக்கூடியதான உரிமைகளை நாம் விரும்புகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
விடுதலை செய்யப்பட்ட மற்றொருவர், நான் மகிழச்சியாக இருக்கின்றேன். ஏனெனில் நான் சுதந்திரத்தை உணர்கின்றேன்;. அத்துடன் எனது குடும்பம், பிள்ளைகளுடன் இணைந்துள்ளேன். எனக்கொரு வேலை தேடவேண்டும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் கருத்துத் தெரிவித்த அவர், புலிகளைப் பற்றி நான் கதைக்க விரும்பவில்லை. ஆனால், எமது மக்களைப் பற்றி அதாவது தமிழ் மக்களைப் பற்றி நாங்கள் சிந்திக்கிறோம் என்றும் யுத்தத்தில் ஒரு தரப்புவென்றால் மற்றத்தரப்புத் தோல்வியடைகின்றது. வெற்றியடையும் தரப்பின் கரம் மெலோங்குகின்றது. ஆதலால் அவர்கள் எமக்கு என்ன கொடுக்கின்றார்கள் என்பது மட்டுமே எம்மால் எதிர்பாக்க முடியும். மோதல் போன்ற விடயங்கள் இடம் பெறாமல் தடுப்பதற்காக சிலவற்றை அவர்கள் தருவார்கள் என நாம் நம்பகிறோம் எனக் கூறியிருக்கிறார்.
ஊன்றுகோலுடன் வெளியே வந்த மனிதரொருவர், இப்போது என்னால் எதனையும் கூறமுடியாது. இப்போதுதான் வெளியே வந்திருக்கிறேன். விடயங்கள் எவ்வாறு இடம் பெறுகின்றன என்று நான் பார்க்க வேண்டிய தேவையுள்ளது எனக்கூறியுள்ளார்.
ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டவர்கள் சிலர் ஏனையவர்களால் ஒதுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. புலிகளில் பலர் சண்டையிடும் ஆளணியினராக இருந்து வந்ததனால் சமூகத்தில் செல்வாக்குள்ள தனி நபர்களாக கருதப்படுவதற்கான வாய்ப்புக்கள் அரிதாகவே இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு மாகாணத்தில் புலிகளின் முக்கியதஸ்தர்கள் அரசுடன் சேர்ந்து இயங்கி பெரும் செல்வாக்குடன் வாழந்து வருகின்ற போதும் புலிகளின் ஏனைய முன்னாள் உறுப்பினர்கள் கைவிடப்பட்டள்ளதாகவே தெரிகிறது. இதே வேளை இலங்கையில் மட்டக்களப்பு – செங்கலடி செல்லம் தியேட்டரில் ‘எந்திரன்” திரைப்படத்திற்கான முதல் டிக்கட்டை வாங்கியிருக்கிறார் கிழக்கு மாகாண முதலமைச்சர்.