தங்கள் கருத்துக்களையும் கேட்க வருமாறு ஆணைக்குழுவிடம் தமிழ்க் கைதிகள் கோரிக்கை.
இனியொரு...
நீண்ட காலம் விசாரணைகளின்றியும் விடுதலையின்றியும் சிறைகளில் வாடும் தங்களது கருத்துக்களையும் கேட்க வருமாறு ஆணைக்குழுவிற்கு புதிய மகசீன் சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் பத்திரிகைகள் மூலம் கோரிக்கை விடுத்ததுள்ளனர். இக்கோரிக்கையில், இளமையிலிருந்தே சிறைச்சாலையிலேயே காலத்தைக் கழித்த வரும் நாங்கள் வாழவேண்டும் என்பதற்காக இங்கு உயிரோடு இருக்கிறோம். 5 வருடங்கள் முதல் 17 வருடங்களுக்கும் மேலாக சிறையினுள்ளே வாழ்கின்ற நாங்கள் இந்நாட்டின் பிரஜைகள் இல்லையா? அல்லது உறவுகளுடன் வாழத் தகுதியற்றவர்களா, என்பது விடைகாணாத வினாவாகவே உள்ளது எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் துன்பங்களையும் கஷ்டங்களையும் கேட்டறிந்து கொள்ள நல்லிணக்க ஆணைக்குழு எங்கள் முன் வரவேண்டும். விடுதலை செய்யப்படாமல் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் எங்களை விடுதலை செங்வதற்காக எங்கள் அனைவரின் கருத்துக்களையும் கேட்டறிந்து ஜனாதிபதியின் முன்னிலையில் சமர்ப்பியுங்கள் எனக் கோரப்பட்டுள்ளது.