Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தகுதி வாய்ந்த பத்திரிகையாளர்களுக்கு கலைஞர் காப்பீட்டுத் திட்டமாம்?

தகுதி என்பதற்கான தகுதி என்ன? என்று எந்த ஊடகவியளாராவது கேட்டால் கருணாநிதிக்கு ஜால்ரா அடிப்பதும். திமுக வுக்கு ஜால்ரா அடிப்பதும்தான் தகுதி அன்றி வேறென்ன? தமிழகத்தின் அச்சு, காட்சி ஊடகங்கள் அது சினிமா, தொலைக்காட்சி, கேபிள் , வார, நாளிழதள்காக இருந்தாலும் கருணாநிதியும் அவரது குடும்பத்தினருமே செல்வாக்குச் செலுத்துகிறார்கள். ஒன்றிலோ அவர்கள் சொந்த நிறுவனங்களாக இவைகள் இருக்கின்றன. அல்லது அரசிடம் பல் சலுகைகளைப் பெற்றுக் கொண்டு அரசுக்கு ஜால்ரா அடிக்கும் ஊடகங்காளாகவே இருக்கின்றன. இதற்கு எந்த தமிழக ஊடகங்களும் விதிவிலக்கில்லை. மக்கள் விரோத திமுக ஆட்சியில் தமிழக மக்கள் அனுபவிக்கும் விலைவாசி ஏற்றம், மின்வெட்டு, வேலையிழப்பு, வறுமை உள்ளிட்ட எந்த ஒரு செய்திகளையும் ஊடகங்கள் வெளியிடுவதில்லை. கருணாநிதிக்கு கருப்புக் கொடி காட்டப்பட்ட போது அது எந்த ஊடகங்களிலும் வந்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள் திமுகவினர் அதையும் மீறி அச்செய்தி ஜெயலலிதாவின் நிறுவனமான ஜெயா தொலைக்காட்சி மூலமாகவும் ஆங்கில ஊடகங்கள் வழியாகவும் கசிந்து கருணாநிதியை படுத்தி எடுத்து விட்டது. சமீபத்தில் இராமச்சந்திர ஆதித்தன் நாடாரால் நடத்தப்படும் தினத்தந்தி நாளிதழின் நிருபர் ஒருவர் கருணாநிதியைச் சந்தித்து ” இனி உங்களை கலைஞர் என்று சொல்ல மாட்டோம் வள்ளன் கலைஞர் என்று சொல்வோம் என்று சொல்லி விட்டு. ஒட்டு மொத்த பத்திரிகையாளர்களுமே கருணாநிதியை வள்ளல் கருணாநிதி என்று சொல்வதாக செய்தி போட்டது தினத் தந்தி. ஆக இதுதான் தகுதி?

ஊடகவியளார்களுக்காக நடத்தபப்டும் இரண்டு சங்கங்களுமே அல்லக்கை சங்கங்கள். திமுகவின் அடிவருடிகளின் சங்கங்களாகவும், ஆளும் வர்க்கங்களிடம் அண்டிப்பிழைக்கும் சங்கங்களாகவும் இருக்கின்ற நிலையில் எப்போதும் இவர்கள் கருணாநிதி குடும்ப ஊடகம் பாதிக்கப் பட்டால் மட்டுமே வெளிப்படையாக வீராவேசமாக போராடுவார்கள். ஆனால் அதுவே கருணாநிதிக்கு எதிரான ஊடகவியளார்கள் திமுகவினரால் தாக்கப்பட்டால் அதை சம்பிரதாய அறிக்கைகளோடு முடித்துக் கொள்வார்கள். இதுதான் ஊடக சங்கங்களின் தகுதி. ஊடக முதலாளிகளின் கருணாநிதி குடும்ப ஊடக முதலாளிகளின் சுதந்திரமே ஊடகச் சுதந்திரமாக மாற்றப்பட்டு விட்ட நிலையில் தங்களின் ஆதரவு பத்திரிகையாளர்களுக்கு சலுகை அளிக்கும் விதமான பத்திரிகையாளர்களுக்கும் கலைஞர் காப்பீட்டுத்திட்டத்தை அறிவித்திருக்கிறார் கருணாநிதி. செய்தி

மற்றும் விளம்பரத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு அந்தத் துறையின் அமைச்சர் பரிதி இளம்வழுதி பதிலளித்து வெளியிட்ட அறிவிப்புகள்:பத்திரிகையாளர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் நடப்பு ஆண்டு முதல் செயல்படுத்தப்படும். ஆண்டு வருமானம் ரூ.72,000க்கும் குறைவாக உள்ள பத்திரிகையாளர் அனைவரும் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கானகலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில்உறுப்பினராகச் சேர்க்கப்படுவர். அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கிட மாவட்டந்தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.ஆண்டு வருமானம் ரூ.72,000க்கு குறைவாக ஊதியம் பத்திரிகையாளர்களுக்கு ஒரு ஆண்டுக்கு ரூ.1 லட்சத்துக்கு மருத்துவக் காப்பீடு அளிக்கும் புதியத் திட்டம் செயல்படுத்தப்படும். 67: 33 என்கிற விகித அடிப்படையில் அரசும் பத்திரிக்கையாளரும் மருத்துவக் காப்பீட்டுப் பிரிமியம் தொகை செலுத்தும் திட்டம் உருவாக்கப்படும்.
அரசு செலுத்தும் 67 சதவீதத்துக்குத் தேவையான தொகை முதல்கட்டமாக பத்திரிகையாளர் நல நிதியத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ. 1 கோடியில் இருந்தும் மற்றும் அதன் வட்டியில் இருந்தும் செலுத்தப்படும்.எஞ்சியுள்ள 33 சதவீத தொகையினை, ஊடகப் பிரதிநிதிகளோ அல்லது அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர் சங்கங்களோ செலுத்த விருப்பம் தெரிவித்தால் இதற்கான திட்டம் உருவாக்கப்படும்.சென்னையில் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் 300 பேருக்கு மட்டும் பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.இந்த ஆண்டில் கூடுதலாக 202 பேருக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். சென்னையில் பணிபுரியும் தொலைக்காட்சி செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. இன்னமும் தமிழக ஊடகங்களில் நிருபர்கள் 2,000, 3,000 ரூபாய்கள் ஊதியத்துடனும் உழைப்புச் சுரண்டலுடனுமே வாழ்கிறார்கள். அவர்களின் ஊதியங்களை உயர்த்திக் கொடுத்தாலே போதும். அவர்களே தங்களுக்கான மருத்துவக் காப்பீட்டைச் செய்து கொள்வார்கள் என்கிற கேள்வியை யாராவது எழுப்புவார்களா?

Exit mobile version